For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"அதுதான் வெற்றி பெற ஒரே தீர்வு" இந்தியாவின் மிடில் ஆர்டர் பிரச்சினை.. மஞ்ச்ரேக்கரின் சூப்பர் ஐடியா!

பார்ல்: இந்தியாவின் மிடில் ஆர்டர் பிரச்சினையை சரிசெய்ய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சூப்பர் ஐடியாவை வழங்கியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோவ்வியடைந்தது.

4 சதம் விளாசியும் சி.எஸ்.கே. வீரருக்கு இடமில்லை- ஆடுகளத்தில் டிவிஸ்ட்.. பும்ரா அபாரம்4 சதம் விளாசியும் சி.எஸ்.கே. வீரருக்கு இடமில்லை- ஆடுகளத்தில் டிவிஸ்ட்.. பும்ரா அபாரம்

தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி மிடில் ஆர்டரில் சொதப்பியதே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இந்திய அணி தோல்வி

இந்திய அணி தோல்வி

297 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் கே.எல்.ராகுல் 12 ரன்களுக்கு வெளியேறிய போதும், ஷிகர் தவான் (79)- விராட் கோலி (51) ஜோடி அரைசதம் விளாசி நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். ஆனால் மிடில் ஆர்டரில் பெரும் ஏமாற்றம் மிஞ்சியது. 152 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்திருந்த இந்திய அணி 214 ரன்களுக்குள் 8 விக்கெட்களை இழந்தது.

மிடில் ஆர்டர் பிரச்சினை

மிடில் ஆர்டர் பிரச்சினை

மிடில் ஆர்டரில் பண்ட் (16), ஸ்ரேயாஸ் (17), வெங்கடேஷ் ஐயர் (2) அஸ்வின் ( 7 ) என அனைவருமே சொதப்பினர். ஷர்துல் தாக்கூர் மட்டும் அரைசதம் அடித்து போராட இந்திய அணி 265 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. கே.எல்.ராகுலும் மிடில் ஆர்டரில் தான் பிரச்சினை ஏற்பட்டது என குற்றம்சாட்டியிருந்தார்.

பிரச்சினைக்கு தீர்வு

பிரச்சினைக்கு தீர்வு

இந்நிலையில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிரச்சினையை சரிசெய்ய சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அட்வைஸ் கூறியுள்ளார். அதில், ரிஷப் பண்ட் 5வது இடத்திலும், வெங்கடேஷ் ஐயர் 6வது இடத்திலும் பேட்டிங் செய்தது தவறான முடிவாகும். மிடில் ஓவர்களில் பிட்ச் மிகவும் வரண்டு காணப்படும். பந்து வேகம் குறைவாக இருக்கும். அந்த சமயத்தில் புதிய பேட்ஸ்மேன் விளையாடுவது சிரமமாக இருக்கும்.

Recommended Video

Venkatesh Iyer இதனால் தான் Bowling போடல.. Shikhar Dhawan சொன்ன காரணம்
 நட்சத்திர வீரர்

நட்சத்திர வீரர்

அந்த சமயத்தில் சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்கள் இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் அவர் பிட்ச்-ன் தன்மைக்கு ஏற்ப ரன்களை உயர்த்துவார். ஆனால் ரிஷப் பண்ட், வெங்கடேஷ் ஐயர் போன்றோர் அதிரடியாக ஆட நினைத்து சுலபமாக விக்கெட்டை விடுவார்கள். எனவே அடுத்த போட்டியில் சூர்யகுமார் இருந்தால் மிடில் ஆர்டர் பலமாக இருக்கும் என மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.

Story first published: Thursday, January 20, 2022, 16:42 [IST]
Other articles published on Jan 20, 2022
English summary
Former Indian player Manjrekar suggests Smart idea for Team india's middle order batting collapse
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X