For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மான்கட் ரன் அவுட் .. ஐசிசி விதி மாறியது கூட தெரியாதா ? இங்கிலாந்துக்கு பாடம் எடுக்கும் நெட்டிசன்கள்

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று, தொடரை முழுமையாக வென்றது.

Recommended Video

Deepti Sharma-வின் Mankading! கதறும் England Cricket! | Aanee's Appeal | *Cricket

இதில், இந்திய வீராங்கனை தீப்தி சர்மா செய்த ரன் அவுட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏதோ, இந்திய வீராங்கனைகள், இங்கிலாந்தை ஏமாற்றி வென்றது போல் இங்கிலாந்து விமர்சகர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

ஆனால் தீப்தி சர்மா செய்தது தவறு அல்ல என்று ஆதரவு குரலும் எழுந்து வருகிறது. இது குறித்து ஐசிசி விதி என்ன சொல்கிறது என்பதை தற்போது காணலாம்.

இங்கிலாந்தை ஓயிட் வாஷ் செய்த இந்திய மகளிர் அணி.. சர்ச்சையான ரன் அவுட்.. தீப்தி சர்மா செய்த சம்பவம்இங்கிலாந்தை ஓயிட் வாஷ் செய்த இந்திய மகளிர் அணி.. சர்ச்சையான ரன் அவுட்.. தீப்தி சர்மா செய்த சம்பவம்

தீப்தி சர்மா மான்கட்

தீப்தி சர்மா மான்கட்

இங்கிலாந்து அணியிடம் கைவசம் ஒரு விக்கெட் இருக்கும் நிலையில், வெற்றிக்கு 39 பந்துகளில் 17 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. அப்போது தீப்தி சர்மா பந்துவீசுவதற்குள் , Non striker ஆக நின்ற டேவிஸ், கிரீஸை விட்டு வெளியேறினார். இதனால், உடனே தீப்தி சர்மா அவரை ரன் அவுட் செய்தார். இதனையடுத்து நடுவர், அதனை அவுட் என அறிவித்தார். இதனையடுத்து டேவிஸ் களத்திலேயே நின்று அழுதார்.

ஐசிசி விதி

ஐசிசி விதி

இங்கிலாந்து கிரிக்கெட் வர்ணனையாளர்கள், மான்கட் செய்து தான் வெற்றி பெற வேண்டுமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், மான்கட் செய்தாலும் இனி அது ரன் அவுட் தான் என்று ஐசிசி அண்மையில் தான் விதியை மாற்றியது. இது வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அப்போது இது ரன் அவுட் ஆகாதா என்ற கேள்வி எழுகிறது.

அஸ்வின் சம்பவம்

அஸ்வின் சம்பவம்

ஐசிசி விதியின் படி மான்கட் முறையை ரன் அவுட் என அறிவிக்கப்படும் என்று தான் சொல்கிறது தவிர, மான்கட் சட்டத்திற்கு எதிரானது அல்ல. ஏற்கனவே, இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில், அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் மான்கட் செய்து இருக்கிறார். இதே போன்று ஐபிஎல் போட்டியிலும் இங்கிலாந்து வீரர் பட்லரை அஸ்வின் மான்கட் செய்து இருக்கிறார்.

பாடம் எடுக்கும் நெட்டிசன்கள்

பாடம் எடுக்கும் நெட்டிசன்கள்

இதனால் தீப்தி சர்மாவும் ஐசிசி விதியின் படியே நடந்து கொண்டுள்ளார். இங்கிலாந்து மகளிர் அணி தொடரை இந்திய வீராங்கனைகளிடம் இழந்த விரக்தியில் பலரும் விமர்சனம் செய்து வருவதாகவும், ஐசிசியின் விதியை அவர்கள் வசதிக்கு ஏற்ப மறந்துவிடக் கூடாது என்றும் இந்திய ரசிகர்கள் தீப்தி சர்மாவுக்கு ஆதரவாக கருத்துக்களை கூறி வருகின்றனர்.

Story first published: Tuesday, September 27, 2022, 10:51 [IST]
Other articles published on Sep 27, 2022
English summary
Mankad rules explained – Did Deepti sharma committed mistake in 3rd
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X