ஐபிஎல் நடக்க வாய்ப்பே இல்ல.. சாத்தியக்கூறுகளை உடைத்து வைத்த முன்னாள் வீரர்.. இதுதான் காரணம்!

இங்கிலாந்து: தடைபட்டுள்ள 14வது ஐபிஎல் தொடர் மீண்டும் இந்தாண்டு நடக்க வாய்ப்பே இல்லை என முன்னாள் வீரர் பகீர் தகவல் கொடுத்துள்ளார்.

IPL 2021 நடைபெறாது என்று முன்னாள் வீரர் Mark Butcher பகீர் தகவல் கொடுத்துள்ளார் |Oneindia Tamiil

14வது ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தவைக்கப்பட்டுள்ளது. வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அடுத்த களத்துக்கு தயாரா இருக்கற சாம்பியன்கள்... ஆனா அதுதான் ரொம்ப கஷ்டம்!

மொத்தம் உள்ள 60 போட்டிகளில் 29 போட்டிகளே நடைபெற்று முடிந்துள்ள நிலையில் மீதம் 31 போட்டிகள் உள்ளன.

இழப்பு

இழப்பு

மீதமுள்ள இந்த போட்டிகளை நடத்தி முடிக்காவிட்டால் பிசிசிஐக்கு சுமார் ரூ.2500 கோடி வரை நஷ்டம் ஏற்படும் எனக்கூறப்பட்டுள்ளது. பிசிசிஐக்கு அதிகபடியான வருமானமாக தொலைகாட்சி ஒளிபரப்பு மூலம் கிடைக்கிறது. அதன்படி ஒரு போட்டிக்கு ரூ. 54.5 கோடியை பிசிசிஐக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த முறை 31 ஆட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் சுமார் ரூ.1600 கோடி நஷ்டம் ஏற்படும்.

ஐபிஎல்

ஐபிஎல்

இதனால் மீதமுள்ள போட்டிகளை இந்தாண்டு டி20 உலகக்கோப்பை முன்னதாக செப்டம்பரில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. இந்த போட்டிகளை நடத்த ஏதுவான இடங்களாக ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து, ஆஸ்திரேலிய, இலங்கை போன்ற நாடுகள் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றன.

வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

இந்நிலையில் ஐபிஎல் இந்தாண்டு நடக்கவே நடக்காது என இங்கிலாந்து முன்னாள் வீரர் மார்க் பட்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்திய அணி வரும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருக்கும். டி20 உலகக்கோப்பை அக்டோபரில் இந்தியாவில் நடைபெறவுள்ளது. எனவே அனைத்து நாட்டு வீரர்களும் அதற்கான பயிற்சிகளில் இருப்பார்கள். ஐபிஎல்-ல் பங்கேற்க வாய்ப்பு குறைவு.

கஷ்டமான காலம்

கஷ்டமான காலம்

ஐபிஎல் தொடர் மிகவும் பணம் பொழியும் தொடர் தான். இருப்பினும் உலகக்கோப்பையை முன்னிட்டு அனைத்து சர்வதேச அணிகளும், மற்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ளவுள்ளது. ஐபிஎல்-காக வீரர்கள் விமானங்கள் பறந்து சென்று ஆடி வந்துவிடலாம் என்பதற்கு இது சாதாரண நேரம் அல்ல. ஒவ்வொரு வீரரும் அங்கு செல்லும் போது தனிமைப்படுத்த வேண்டும், பின்னர் கிளம்பும் போதும் தனிமைப்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Mark Butcher Views on BCCI’s plan of hosting the remainder of IPL 2021
Story first published: Sunday, May 9, 2021, 16:27 [IST]
Other articles published on May 9, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X