இவருக்கு இடம் இல்லையா? உலகக்கோப்பையில் கலக்கினாரே அதை மறந்துட்டீங்களா? பதறும் முன்னாள் வீரர்கள்!

லண்டன் : ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான புகழ்பெற்ற ஆஷஸ் தொடரில் விளையாட உள்ளது.

இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் இளம் வீரர் ஒருவருக்கு வாய்ப்பு வழங்காதது முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.

ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் சில ஆச்சரியங்களும் இருந்தன. சில ஏமாற்றங்களும் இருந்தன.

தடை செய்யப்பட்ட மூவர்

தடை செய்யப்பட்ட மூவர்

கடந்த ஆண்டு பந்து சேத விவகாரத்தில் சிக்கி ஆஸ்திரேலிய வீரர்கள் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கேமரான் பான்கிராப்ட் தடை செய்யப்பட்டு இருந்தனர். அவர்களில் வார்னர், ஸ்மித் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்று ஒருநாள் அணியில் மீண்டும் ஆடத் துவங்கினர். தற்போது டெஸ்ட் அணியில் அவர்களுடன், மற்றொரு தடை செய்யப்பட்ட வீரர் பான்கிராப்ட்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

அலெக்ஸ் கேரி இல்லை

அலெக்ஸ் கேரி இல்லை

ஆனால், உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக ஆடி மிடில் ஆர்டரில் ஆஸ்திரேலிய அணியை பல போட்டிகளில் காப்பாற்றிய அலெக்ஸ் கேரிக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டு தான் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அணித் தேர்வில் குழப்பம்

அணித் தேர்வில் குழப்பம்

ஆஸ்திரேலிய அணித் தேர்வில் சில குழப்பங்கள் உள்ளன. இரண்டு ஆண்டுகளாக டெஸ்ட் அணியில் இடம் பெறாத மேத்யூ வேடு சமீப காலமாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடி வருவதை அடுத்து டெஸ்ட் அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். அதே போல, அறிவிக்கப்பட்ட 17 வீரர்கள் கொண்ட அணியில் இந்தியா ஒரே ஒரு சுழற் பந்துவீச்சாளர் மட்டுமே இடம் பெற்று இருக்கிறார்.

அலெக்ஸ் கேரி செயல்பாடு

அலெக்ஸ் கேரி செயல்பாடு

இந்த குழப்பத்துக்கு இடையே தான் அலெக்ஸ் கேரி புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார். உலகக்கோப்பை தொடரில் டாப் ஆர்டர் சரிந்த போதெல்லாம், கடைசி கட்ட பேட்ஸ்மேன்களுடன் ஜோடி சேர்ந்து அணியை மீட்டார்.

பேட்டிங் எப்படி?

பேட்டிங் எப்படி?

அவரது திறமையை கண்டு அப்போது பலரும் பாராட்டினர். விக்கெட் கீப்பரான அவர் உலகக்கோப்பையில் 10 போட்டிகளில் 20 விக்கெட் வீழ்ச்சி செய்து, அந்த தொடரின் இரண்டாவது சிறந்த விக்கெட் கீப்பராக திகழ்ந்தார். மேலும், 10 போட்டிகளில் 375 ரன்கள் குவித்துள்ளார். இதன் சராசரி 62.50 ஆகும்.

மார்க் வாஹ் அதிர்ச்சி

மார்க் வாஹ் அதிர்ச்சி

அலெக்ஸ் கேரி ஆஷஸ் அணியில் இடம் பெறாதது குறித்து ஷேன் வார்னே ஆச்சரியமும், ஏமாற்றமும் அடைந்ததாக கூறினார். மார்க் வாஹ், உலகக்கோப்பையில் அவரது பேட்டிங்கை பார்த்த பிறகும், இரண்டாவது சிறந்த கீப்பராக இருந்தும், அலெக்ஸ் அணியில் இல்லாதது பெரிய அதிர்ச்சி என கூறி இருக்கிறார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Mark Waugh, Shane Warne disappointed over Alex Carey omission in Ashes
Story first published: Saturday, July 27, 2019, 18:28 [IST]
Other articles published on Jul 27, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X