For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

4 போட்டிகளில் 3 டக்-அவுட்... மீண்டும் பார்மிற்கு திரும்புவாரா ராகுல்?

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3வது டி20 போட்டியில் துவக்க ஆட்டக்காரர் கேஎல் ராகுல் டக் அவுட் ஆகியுள்ளார்.

டி20 தொடரின் முதல் 3 போட்டிகளில் ஒரு போட்டியில் 1 ரன்னும் அடுத்த இரு போட்டிகளில் டக்-அவுட்டும் ஆகியுள்ளார் கேஎல் ராகுல்.

கடந்த 4 டி20 போட்டிகளில் 3 போட்டிகளில் டக்-அவுட் ஆகி இந்திய அணிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் கேஎல் ராகுல்.

3வது டி20 போட்டி

3வது டி20 போட்டி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3வது டி20 போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 156 ரன்களை 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு அடித்துள்ளது. இதையடுத்து தற்போது இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. மேலும் ஜேசன் ராய் விக்கெட்டையும் இழந்துள்ளது.

டக்-அவுட் ஆன கேஎல் ராகுல்

டக்-அவுட் ஆன கேஎல் ராகுல்

இந்த போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய கேஎல் ராகுல் டக் அவுட் ஆகியுள்ளார். இந்த தொடரின் முதல் 3 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே ஒரு ரன்னை அடித்துள்ளார் ராகுல். மேலும் கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதிப்போட்டியிலும் அவர் டக்-அவுட் ஆனார்.

3 டக் -அவுட்

3 டக் -அவுட்

இதையடுத்து கடந்த 4 இன்னிங்ஸ்களில் அவர் 3 போட்டிகளில் டக்-அவுட் ஆகியுள்ளார். இதையடுத்து அவரது பார்ம் குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். டி20 தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள கேஎல் ராகுல் தற்போது கடினமான காலகட்டத்தில் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சூர்யகுமார் யாதவ் நீக்கம்

சூர்யகுமார் யாதவ் நீக்கம்

கடந்த இரு போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடாத நிலையில் இன்றைய போட்டியில் அவர் நீக்கப்படுவார் அவருக்கு பதிலாக ரோகித் விளையாடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் கேஎல் ராகுல் துவக்க வீரராகவே களமிறக்கப்பட்டு, சூர்யகுமார் யாதவ் இன்றைய போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Story first published: Tuesday, March 16, 2021, 22:01 [IST]
Other articles published on Mar 16, 2021
English summary
The Indian opening batsman has registered his third consecutive single-digit score in the series
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X