For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முதல் டெஸ்டில் டக்..! இப்போ.. டான் பிராட்மேன் சாதனை பட்டியலில்..!! ஆச்சரியம் தந்த இளம் வீரர்..!!

லீட்ஸ்: ஆஷஸ் தொடரில் ஆஸி.வீரர் மார்னஸ் லம்புஷேன் யாரும் நினைத்து பார்க்க முடியாத ஒரு சாதனையை எட்டி பிடித்திருக்கிறார். கிரிக்கெட் உலகில் இப்படி ஒரு ரெக்கார்டு இருக்கிறதா என்பதே பலருக்கு என்பது தான் ஆச்சர்யம்.

உலக கோப்பையை வெறித்தனமான போட்டி ஆஷஸ் தொடர். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்களையோ அல்லது வீரர்களிடமே கிரிக்கெட் பற்றி கேள்வி கேட்டால் அவர்கள் சொல்வது இப்படித்தான்.

அப்படிப்பட்ட ஒரு தொடரில் வித்தியாசமான சாதனைக்கு சொந்தக்காரராகி விட்டார் ஆஸி. வீரர் மார்னஸ் லம்புஷேன். நம்பிக்கை நட்சத்திரம், தனித்துவ பேட்ஸ்மென் வரிசையில் இருப்பவர் ஸ்டீவ் ஸ்மித். அவருக்கு பதிலாக அணியில் இணைந்தவர் லபுஷேன்.

கலக்கிய மார்னஸ்

கலக்கிய மார்னஸ்

யாரும் நினைக்கவே இல்லை. அவரது பேட்டிங்குக்கு ஈடுகொடுத்தும், அவரது இடத்தை நிரப்புவார் என்று ஸ்மித்தே நினைத்து பார்த்திருக்க மாட்டார். அவ்வளவு அழகாக ஆஷஸ் தொடரில் கலக்கி இருக்கிறார். லீட்ஸ் 3வது டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் அரைசதம் அடித்தார்.

பொறுப்பான ஆட்டம்

பொறுப்பான ஆட்டம்

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய விக்கெட்டுகள் ஒருமுனையில் சரிய, மறு முனையில் நங்கூரமாய் நின்று, 74 ரன்கள் அடித்தார். அவரது பொறுப்பான ஆட்டத்தால் தான் ஆஸ்திரேலிய 179 என்ற கவுரமான ரன்களையாவது எடுத்தது. பின்னர் ஆஸ்திரேலியா, 2வது இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

சாதனை வெற்றி?

சாதனை வெற்றி?

இந்த இன்னிங்சிலும் அரைசதம் அடித்த லபுஷேன், 80 ரன்களை குவித்து ரன் அவுட்டானார். இதையடுத்து 359 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இங்கிலாந்து இறங்கி இருக்கிறது. வென்றால் இங்கிலாந்துக்கு அது ஒரு வரலாற்று சாதனை வெற்றியாகும்.

தனித்துவ ரெக்கார்டு

தனித்துவ ரெக்கார்டு

இந்த போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சிறப்பாக ஆடிய லபுஷேன், டெஸ்ட் வரலாற்றில் தனித்துவமான ஒரு சாதனை பட்டியலில் இணைந்திருக்கிறார். அதாவது எதிரணி, ஒரு இன்னிங்சில் அடித்த ஸ்கோரை விட, 2 இன்னிங்சிலும் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனை பட்டியலில் லபுஷேன் இணைந்து உள்ளார்.

5வது வீரர் மார்னஸ்

5வது வீரர் மார்னஸ்

இங்கிலாந்து, முதல் இன்னிங்ஸில் வெறும் 67 ரன்கள் மட்டுமே அடித்தது. லபுஷேன், இரண்டு இன்னிங்ஸிலும் முறையே 74, 80 ரன்களை அடித்திருக்கிறார். இது இங்கிலாந்து ஸ்கோரை விட அதிகம். இதன்மூலம் இந்த சாதனையை செய்த 5வது வீரர் என்ற பெருமையை லபுஷேன் பெற்றிருக்கிறார்.

சாதனையாளர்கள்

சாதனையாளர்கள்

இதற்கு முன் டான் பிராட்மேன், கிரினிட்ஜ், மேத்யூ ஹைடன், ஜஸ்டின் லாங்கர் ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர். தற்போது அந்த ஜாம்பவான்களுடன் லபுஷேனும் இணைந்திருக்கிறார்ர்.

1. டான் பிராட்மேன்(ஆஸி) - 132, 127 ரன்கள் vs இந்தியா (125 ரன்கள்) - 1948

2. கிரினிட்ஜ் (வெஸ்ட் இண்டீஸ்) - 134, 101 ரன்கள் vs இங்கிலாந்து (71 ரன்கள்) - 1976

3. மேத்யூ ஹைடன்(ஆஸி) - 197, 103 ரன்கள் vs இங்கிலாந்து (79 ரன்கள்) - 2002

4. ஜஸ்டின் லாங்கர்(ஆஸி) - 191, 97 ரன்கள் vs பாகிஸ்தான் (72 ரன்கள்) - 2004

5. மார்னஸ் லபுஷேன்(ஆஸி) - 74, 80 ரன்கள் vs இங்கிலாந்து (67 ரன்கள்) - 2019

Story first published: Sunday, August 25, 2019, 13:47 [IST]
Other articles published on Aug 25, 2019
English summary
Marnus labuschagne makes a record in ashes test series.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X