For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

14 ரன்கள் தேவை.. கையில் 6 விக்கெட்.. ஆனாலும் தோல்வி அடைந்த அணி.. கதி கலங்க வைத்த ஒரு போட்டி!

ஆஸ்திரேலியாவை சேர்ந்த தாஸ்மானியா அணி 12 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டை இழந்து விக்டோரியா அணியிடம் தோல்வி அடைந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெர்த்: ஆஸ்திரேலியாவை சேர்ந்த தாஸ்மானியா அணி 12 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டை இழந்து விக்டோரியா அணியிடம் தோல்வி அடைந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆஸ்திரேலியாவில் தற்போது மார்ஷ் ஒருநாள் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. பல்வேறு உள்ளூர் அணிகள் இந்த போட்டியில் விளையாடி வருகிறது.

ஆஸ்திரேலியா தேசிய அணியில் கலக்கிய வீரர்கள் பலர் தங்கள் ஊர் அணிகளுக்காக இதில் விளையாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று விக்டோரியா அணிக்கும் தாஸ்மானியா அணிக்கும் இடையில் போட்டி நடைபெற்றது.

எப்படி போட்டி

எப்படி போட்டி

கடந்த முறை இந்த தொடரில் விக்டோரியா அணிதான் கோப்பையை வென்றது. ஆனால் இந்த முறை இந்த தொடரில் தொடக்கத்தில் இருந்து விக்டோரியா அணி தோல்வியை தழுவி வந்தது. நேற்று நடந்த போட்டியில் அந்த அணி 185 ரன்கள் எடுத்தது. சுதர்லேன்ட் 53 ரன்கள் எடுத்தார். தாஸ்மானியாவின் எல்லிஸ் 3 விக்கெட் எடுத்தார்.

அடுத்து என்ன

அடுத்து என்ன

அதன்பின் களமிறங்கிய தாஸ்மானியா தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடியது. அந்த அணி 39 ஓவர்களிலேயே 172 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இருந்தது. அணியின் வெற்றியும் உறுதியாகிவிட்டது.

யார் இருந்தார்

யார் இருந்தார்

களத்தில் தாஸ்மானியா வீரர் மெக் டெர்மோட் 78 ரன்கள் உடன் இருந்தார். இதனால் கண்டிப்பாக அந்த அணி வென்றுவிடும் என்று எல்லோரும் நினைத்தார்கள். 42 ஓவர்களுக்குள் வெற்றிபெற்றால், கூடுதல் புள்ளிகள் கிடைக்கும் என்பதால் தாஸ்மானியா வீரர்கள் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆட தொடங்கினார்கள்.

ஆனால் சிக்கல்

ஆனால் சிக்கல்

ஆனால் தாஸ்மானியா அங்குதான் தவறு செய்தது. அந்த பந்தில் தாஸ்மானியா வீரர் மெக் டெர்மோட் ரன் எடுக்க தவறினார். அதற்கு அடுத்த பந்தே அவர் விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பின் வரிசையாக சீட்டு கட்டு போல அந்த அணி விக்கெட்டுகளை இழந்தது.

எப்படி விக்கெட்

எப்படி விக்கெட்

ஆம், வரிசையாக விக்கெட், 1 ரன், நோ ரன், வைட், 1 ரன், சிக்ஸ், விக்கெட், விக்கெட், நோ ரன், 1 ரன், 1 ரன், விக்கெட், நோ ரன், விக்கெட், 1 ரன், விக்கெட் என்று வரிசையாக அந்த அணி விக்கெட்டுகளை இழந்தது. ஆம் மொத்தம் 12 ரன்களுக்கு அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்தது.

 மோசமாக தோல்வி

மோசமாக தோல்வி

இதன் மூலம் தாஸ்மானியா 184 ரன்கள் எடுத்து, அனைத்து விக்கெட்டையும் இழந்து 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. விக்டோரியா அணியில் டெர்மெய்ன் 4 விக்கெட் மற்றும் கோல்மேன் 4 விக்கெட் எடுத்தனர். கோல்மேன் கடைசி ஓவரில் மட்டும் 3 விக்கெட் எடுத்து அசத்தினார்.

மோசம்

மோசம்

இதனால் எளிதாக வெற்றிபெற வேண்டிய போட்டியை விக்டோரியாவிடம் தாஸ்மானியா பறிகொடுத்தது . தாஸ்மானியா தோல்வி அடைந்த இந்த போட்டி இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. இதன் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

Story first published: Tuesday, September 24, 2019, 12:18 [IST]
Other articles published on Sep 24, 2019
English summary
Marsh Cup: Tasmania loses to Victoria by losing 6 wickets for 12 runs in a dramatical match yesterday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X