For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இவ்ளோ மோசமான பிட்ச்சா? போட்டியே வேண்டாம்.. புகழ்பெற்ற மைதானத்தில் நடந்த பரபர சம்பவம்!

மெல்பர்ன் : மெல்பெர்ன் கிரிக்கெட் மைதானத்தின் மோசமான பிட்ச் காரணமாக மார்ஷ் ஷெபீல்டு ஷீல்ட் போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் சமமான புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

உலக புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் கடந்த 2017 முதலே மோசமான பிட்ச் காரணமாக சர்ச்சைக்குரியதாக காணப்படுகிறது. இதை மோசமான பிட்ச் என்று வரையறுத்திருந்த ஐசிசி பின்பு சராசரியாக மதிப்பிட்டுள்ளது.

ஷெபீல்டு ஷீல்ட் போட்டிக்காக இந்த மைதானத்தில் விக்டோரியா மற்றும் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணிகள் நேற்று மோதிய நிலையில் மோசமான பிட்ச் காரணமாக முதல் நாளிலேய போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

 மோசமான பிட்ச்சால் பாதிப்பு

மோசமான பிட்ச்சால் பாதிப்பு

உலகப் புகழ்பெற் மெல்பெர்ன் கிரிக்கெட் மைதானம் சமீப காலங்களாக மோசமான பிட்ச் காரணமாக மிகுந்த சர்ச்சைகளுக்கு உள்ளாகி வருகிறது. இதில் விளையாட வீரர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

 மோசமான பிட்ச்சால் சர்ச்சை

மோசமான பிட்ச்சால் சர்ச்சை

கடந்த 2017ல் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளின்போது, இந்த மைதானத்தின் பிட்ச் மிகவும் மோசமாக இருந்ததால் வீரர்கள் அந்த போட்டியில் விளையாட திணறினர்.

 சராசரியாக மதிப்பீடு

சராசரியாக மதிப்பீடு

இதையடுத்து மெல்பெர்ன் கிரிக்கெட் மைதானத்தின் பிட்ச்சை மோசமானதாக ஐசிசி வரையறை செய்திருந்தது. இந்தியாவிற்கு எதிரான போட்டியை தொடர்ந்து இந்த மைதானம் சராசரியாக மதிப்பிடப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வந்தது.

 துவக்க தினத்திலேயே நின்ற போட்டி

துவக்க தினத்திலேயே நின்ற போட்டி

இந்நிலையில் மெல்பெர்ன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஷெபீல்டு ஷீல்ட் போட்டி துவக்க தினத்திலேயே ரத்து செய்யப்பட்டதால் மீண்டும் இந்த மைதானத்தில் போட்டிகள் நடத்தப்படுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

 அணிகளுக்கு புள்ளிகள் பகிர்ந்தளிப்பு

அணிகளுக்கு புள்ளிகள் பகிர்ந்தளிப்பு

வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன் ஆடத் துவங்கிய நிலையில், பேட்ஸ்மேன் மீது எதிரணியினர் வீசிய பந்து தாக்கியதை அடுத்து அம்பயர்கள் மற்றும் மைதான நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டு போட்டியை ரத்து செய்து இரு அணிகளுக்கும் புள்ளிகளை சமமாக பகிர்ந்தளித்தனர்.

 நடைபெறுமா என கேள்வி

நடைபெறுமா என கேள்வி

மெல்பெர்ன் கிரிக்கெட் மைதானத்தின் மோசமான நிலையை அடுத்து, அங்கு 3 வாரங்களுக்கு பிறகு நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டி நடைபெறுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

Story first published: Sunday, December 8, 2019, 17:33 [IST]
Other articles published on Dec 8, 2019
English summary
Melbourne Cricket Ground's dangerous pitch - Shield match called-off
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X