For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரோஹித், தோனியை முந்திய நியூசிலாந்து வீரர்.. இலங்கை ஒருநாள் போட்டியில் புதிய சாதனை

மவுன்ட் மவுங்கான் : நியூசிலாந்தில் நடைபெற்று வரும் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில், நியூசிலாந்து வீரர் மார்டின் குப்டில் 6000 ரன்களை கடந்து சாதனை படைத்தார்.

மற்றொரு வீரரான ஜிம்மி நீஷம் ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்து பட்டையைக் கிளப்பினார். இந்த போட்டியில் நியூசிலாந்து 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

குப்டில் சதம்

குப்டில் சதம்

ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர் மார்டின் குப்டில் சிறப்பாக ஆடி 138 ரன்கள் குவித்தார். கேப்டன் கேன் வில்லியம்சன் 76, ராஸ் டெய்லர் 54 அடித்தனர்.

நீஷம் அசத்தல்

நீஷம் அசத்தல்

கடைசி நேரத்தில் ஜிம்மி நீஷம் பட்டையைக் கிளப்பினார். 13 பந்துகளில் 47 ரன்கள் குவித்தார் நீஷம். கடைசி இரண்டு ஓவர்களில் மட்டும் 6 சிக்ஸர்கள் அடித்தார். இதில் 5 சிக்ஸர்கள் 49வது ஓவரில் கிடைத்தது. அந்த ஓவரில் மட்டும் 34 ரன்கள் எடுத்தது நியூசிலாந்து.

இலங்கை தோல்வி

இலங்கை தோல்வி

நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழந்து 371 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இலங்கை அணியில் டிக்வெல்லா 76, குணதிலகா 43, பெரேரா 102 ரன்கள் அடித்தாலும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். அந்த அணி 49 ஓவர்களில் 326 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

6000 ரன்கள் சாதனை

6000 ரன்கள் சாதனை

நியூசிலாந்து அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 138 ரன்கள் அடித்த மார்டின் குப்டில் ஆட்டநாயகன் விருதை வென்றார். அவர் இந்த போட்டியில் 6000 ரன்களை கடந்தார். குறைந்த இன்னிங்க்ஸ்களில் 6000 ஒருநாள் போட்டி ரன்களை கடந்தவர்கள் பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்துள்ளார்.

ரோஹித், தோனி பின்னே

ரோஹித், தோனி பின்னே

157 இன்னிங்க்ஸ்களில் 6114 ரன்கள் எடுத்துள்ளார் குப்டில். இதன் மூலம் ரோஹித் (162 இன்னிங்க்ஸ்), தோனி (166 இன்னிங்க்ஸ்), ஆகியோரை முந்தி டீன் ஜோன்ஸ்- உடன் 157 இன்னிங்க்ஸ்களில் 6000 ரன்களை கடந்த பட்டியலில் நான்காம் இடம் பிடித்துள்ளார்.

அம்லா முதல் இடம்

அம்லா முதல் இடம்

முதல் மூன்று இடங்களில் ஹஷிம் அம்லா (123 இன்னிங்க்ஸ்), கோலி (136 இன்னிங்க்ஸ்) மற்றும் விவியன் ரிச்சர்ட்ஸ் (141 இன்னிங்க்ஸ்) இருக்கின்றனர். மேலும், குப்டில் அதிக ஒருநாள் போட்டி ரன்கள் அடித்த நியூசிலாந்து வீரர்கள் பட்டியலிலும் நான்காம் இடத்தை பிடித்துள்ளார்.

Story first published: Thursday, January 3, 2019, 17:57 [IST]
Other articles published on Jan 3, 2019
English summary
Martin Guptill beat Rohit, Dhoni record as Neesham hit 5 sixes in an over
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X