For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தமது சாதனை முறியடிக்கப்பட்ட அந்த தருணம்..! ஸ்மித்தை பற்றி என்ன சொன்னார் சச்சின்..?

மும்பை: ஆஷஸ் தொடரில் 3வது சதம் விளாசிய ஸ்மித்தை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் சூப்பரான கம்பேக் என்று பாராட்டி தள்ளியுள்ளார்.

கிரிக்கெட்டில் இந்த தலைமுறையின் சிறந்த வீரராக கருதப்படுபவர்களில் ஒருவர் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித். தென் ஆப்ரிக்கா தொடரின்போது பந்தை சேதப் படுத்தியது தெரிய வர, ஸ்மித் கேப்டனாக இருந்ததால், குற்றச்சாட்டில் இணைக்கப் பட்டார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தி ஸ்மித், வார்னர், பான் கிராப்ட் ஆகியோருக்கு தடைவிதித்தது. ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு தலா ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டது. தடை காலம் முடிந்து ஸ்மித் ஆஷஸ் தொடரில் அறிமுகமானார்.

கையை உடைக்க இங்கிலாந்து பிளான்... !! களத்தில் நடந்தது என்ன? ஸ்டீவ் ஸ்மித் வெளியிட்ட பகீர் தகவல்..!கையை உடைக்க இங்கிலாந்து பிளான்... !! களத்தில் நடந்தது என்ன? ஸ்டீவ் ஸ்மித் வெளியிட்ட பகீர் தகவல்..!

சதம் தந்த நாயகன்

சதம் தந்த நாயகன்

எட்ஜ்பாஸ்டன் டெஸ்டின் 2 இன்னிங்சிலும் சதம் அடித்தார். லார்ட்சில் முதல் இன்னிங்சில் அரைசதம், தற்போது நடைபெற்று வரும் ஓல்டு டிராபோர்டு டெஸ்டில் சதம் என சாதனைகளை படைத்து வருகிறார்.

சதம் நம்பர் 26

சதம் நம்பர் 26

2வது டெஸ்டில் ஆர்ச்சர் பந்தில் அடி வாங்கி, சிகிச்சைக்கு பின்னர் இந்த போட்டியில் களமிறங்கினார். போட்டியில் தனது 26வது சதத்தை எடுத்தார். இதன் மூலம் குறைவான இன்னிங்சில் 26 சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் ஸ்மித் 2வது இடத்தை பிடித்துள்ளார்.

121 இன்னிங்ஸ்

121 இன்னிங்ஸ்

ஏற்கனவே 2வது இடத்திலிருந்த ஜாம்பவான் சச்சின் சாதனையை ஸ்மித் முறியடித்துள்ளார். சச்சின் 136 இன்னிங்சில் 26 சதங்களை அடித்தார். ஆனால் ஸ்மித் 121 இன்னிங்சில் தனது 26வது சதத்தை அடித்துள்ளது குறிப்பிடத் தக்கது. டெஸ்டில் தனது 3வது இரட்டை சதத்தையும் பதிவு செய்தார்.

பாராட்டிய சச்சின்

ஸ்மித்தை சச்சின் வெகுவாக பாராட்டியுள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: புரிந்துகொள்ள முடியாத, சிக்கலான தொழில்நுட்பம். ஒழுங்கான மனநிலை மற்ற பேட்ஸ்மேன்களிடம் இருந்து தனித்து காட்டுகிறது. நம்பமுடியாத வகையிலான கம்பேக் என்று பதிவிட்டுள்ளார்.

Story first published: Friday, September 6, 2019, 23:18 [IST]
Other articles published on Sep 6, 2019
English summary
Master blaster sachin praises Australian ace batsman steve smith.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X