For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விதவிதமான ஸ்டைலில் பந்துவீசிய அஸ்வின்… என்னமா வித்தை காட்டினாரு… எல்லாம் பெயிலியரா போச்சு..!

Recommended Video

IPL 2019: Chennai vs Punjab | அஸ்வின் முயற்சிகள் எல்லாம் தோல்வியில்

சென்னை: தோனியின் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாபின் அஸ்வின் வித, விதமான ஸ்டைல்களில் பந்து வீசியது, ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதின. போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் சென்னை அணியின் கேப்டன் தோனி.

அதன்பிறகு துவக்க வீரரான டு பிளெசிஸ் அருமையாக ஆடி 54 ரன்களை குவித்தார். இறுதி ஓவர்களில் தோனி, ராயுடு அதிரடியாக ஆடினர். 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்களை குவித்தது.

நல்லவேளை! தோனி ஸ்டம்ப்பில் அடிச்சும் ராகுல் அவுட் ஆகலை! இல்லைனா சிஎஸ்கே ஜெயிச்சுருக்க முடியுமா? நல்லவேளை! தோனி ஸ்டம்ப்பில் அடிச்சும் ராகுல் அவுட் ஆகலை! இல்லைனா சிஎஸ்கே ஜெயிச்சுருக்க முடியுமா?

அஸ்வின் சூப்பர் பவுலிங்

அஸ்வின் சூப்பர் பவுலிங்

அந்த போட்டியில் பஞ்சாப் கேப்டனான அஸ்வின் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 23 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். போட்டியில் அவர் வீசிய ஸ்டைல் தான் இன்றைய ஐபிஎல் போட்டியின் முக்கிய அம்சம்.

ஸ்டைலை மாற்றிய அஸ்வின்

ஸ்டைலை மாற்றிய அஸ்வின்

இந்த போட்டியில் வழக்கமாக வீசும் பவுலிங் ஸ்டைலை மாற்றினார் அஸ்வின். ஒருமுறை சுழற்பந்து வீச்சு இல்லாமல் வேகப்பந்து வீச்சாளர் போன்று ஓடிவந்து வீசினார்.

சூப்பரான ஸ்டைலில் பவுலிங்

அதன் பிறகு ஜாதவ் போன்று சைட் ஆர்ம் முறையில் பந்துவீசி அசத்தினார். கிடைக்கின்ற வாய்ப்புகளின் அடிப்படையில் பல ஸ்டைல்களில் பந்துவீசி ரசிகர்களை மட்டுமல்ல... எதிரணி வீரர்களையும் குழப்பினார் அஸ்வின்.

ரசிகர்கள் கிண்டல்

ரசிகர்கள் கிண்டல்

என்ன செய்து என்ன பலன்... சென்னை அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி தான் மிச்சம். எனவே... முக்கியமான போட்டியின் போது இது போன்று ஸ்டைல் பவுலிங்கை கைவிட்டு விட்டு, அணியை வெற்றி பாதைக்கு எப்படி அழைத்து செல்வது என்று அவர் யோசித்தால் நல்லது என்று ரசிகர்கள் கிண்டலடிக்க ஆரம்பித்துவிட்டனர்.

Story first published: Saturday, April 6, 2019, 23:21 [IST]
Other articles published on Apr 6, 2019
English summary
In the match against Dhoni's Chennai team, it was surprising to the fans that Ashwin bowled different style.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X