For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஷஸ் தொடரில் சூதாட்டம்.. வீரர்களை விலைக்கு வாங்கிய இந்திய சூதாட்ட கும்பல்.. திடுக்கிடும் பின்னணி

ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சூதாட்டம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

By Shyamsundar

பெர்த்: ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சூதாட்டம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் இந்த போட்டி நடந்து கொண்டு இருக்கிறது.

இந்த சூதாட்டத்தை இந்தியாவை சேர்ந்த சோபர் ஜோபன், பிரியங் சக்சேனா என்ற இரண்டு நபர்கள் நடத்த இருந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் வீரர்களிடம் பேசி அதன் மூலம் அவர்களை சூதாட்டம் செய்ய வைப்பார்கள்.

பின் அதை வைத்து வெவ்வேறு நாடுகளில் இருக்கும் சூதாட்ட பணக்காரர்களிடம் இருந்து இவர்கள் பணம் பெறுவார்கள். தற்போது இதுகுறித்து அதிர்ச்சி அளிக்க கூடிய வகையில் நிறைய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஆஷஸ் தொடரில் சூதாட்டம்

ஆஷஸ் தொடரில் சூதாட்டம்

தற்போது ஆஸ்திரேலியாவிற்கு இங்கிலாந்திற்கு இடையில் ஆஷஸ் தொடர் நடந்து கொண்டு இருக்கிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இன்று மூன்றாவது போட்டி நடந்து கொண்டு உள்ளது. இந்த போட்டியில் சூதாட்டம் நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. இந்த சூதாட்டத்தை இந்தியாவை சேர்த்த சூதாட்ட நபர்களான சோபர் ஜோபன், பிரியங் சக்சேனா ஆகியோர் செய்ய இருக்கின்றனர். இவர்களுக்கும் ஆஸ்திரேலிய, இங்கிலாந்து வீரர்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது.

பின்னணி யார்

பின்னணி யார்

இவர்களுக்கு பின் இந்தியாவை சேர்ந்த முக்கிய நபர் ஒருவர் இருப்பதாக தனியார் பத்திரிக்கை ஒன்றில் இவர்கள் கூறியுள்ளனர். மேலும் ஆஸ்திரேலியாவிலும் 'தி சைலன்ட் மேன்' என்ற நபர் இவர்களுக்கு பின் இருப்பதாக கூறியுள்ளனர். இவர்கள் இருவரும்தான் சூதாட்டம் குறித்த விவரங்களை கேட்பதும், தருவதுமாக இருப்பார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. சோபர் ஜோபன், பிரியங் சக்சேனா எப்படி சொல்கிறார்களே அதை வைத்து மற்ற நபர்கள் அனைவரும் சூதாட்டத்தில் பணம் காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.

சூதாட்டம் எப்படி நடக்கும்

சூதாட்டம் எப்படி நடக்கும்

சோபர் ஜோபன், பிரியங் சக்சேனா இருவரும் சேர்ந்து ஆஸ்திரேலியாவிலும், இங்கிலாந்திலும் சில கிரிக்கெட் வீரர்களை விலைக்கு வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வீரர்கள் அனைவரும் இவர்கள் சொல்வதை அப்படியே கேட்பார்கள். எந்த ஓவரில் எத்தனை ரன் கொடுக்க வேண்டும் என்பதை இவர்கள் ஏற்கனவே சொல்லி இருப்பார்கள். அதை வைத்து சூதாட்ட உலகத்தில் இருக்கும் பெரிய நபர்கள் இவர்கள் மீது பணம் கட்டுவார்கள்.

யார் அவர்கள்

யார் அவர்கள்

சோபர் ஜோபன், பிரியங் சக்சேனா இருவரும் இந்திய சூதாட்ட உலகில் மிகவும் முக்கியமான நபர்கள் ஆவர். மேலும் இதில் சோபர் ஜோபன் இந்திய கிரிக்கெட் அணியில் சேர்வதற்காக முயற்சி செய்து கொண்டு இருந்தார். தற்போது இவர்கள்தான் இந்த சூதாட்டம் குறித்து பத்திரிக்கைக்கு தெரிவித்து இருக்கின்றனர். இதற்காக அவர்கள் அந்த பத்திரிக்கை நிறுவனத்திடம் கோடிக்கணக்கில் பணம் கேட்டு உள்ளனர். மேலும் இவர்களுக்கு பின் இந்தியாவில் சில தொழில் அதிபர்களும், ஆஸ்திரேலியாவில் சில பண முதலைகளும் உள்ளனர்.

சிக்னல் என்ன

சிக்னல் என்ன

இந்த சூதாட்டம் சிக்னல் முறைப்படி நடக்கும். இதற்காக மைதானத்தில் வீரர்களை எளிதாக பார்க்கும் வகையில் சிலர் நிற்க வைக்கப்பட்டு இருப்பார்கள். எந்த ஓவரில் சூதாட்டம் நடக்குமோ அந்த ஓவரில் வீரர்கள் கிளவுஸை கிழட்டுதல், முகத்தை துணியால் துடைப்பது, ஹெல்மெட்டை கிழட்டுவது என சில சிக்னல்கள் கொடுப்பார்கள். அதை வைத்து மைதானத்தில் இருக்கும் நபர்கள் சோபர் ஜோபன், பிரியங் சக்சேனாவுக்கு தகவல் கொடுப்பார்கள். அவர்கள் அதன்முலம் பேட்டிங் செய்வார்கள்.

எந்த வீரர்கள்

எந்த வீரர்கள்

இந்த சூதாட்டத்தில் ஈடுபட முடிவு செய்து இருக்கும் வீரர்கள் யார் என்பது இதுவரை தெரியவில்லை. ஆனால் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து என இரண்டு அணியிலும் சில வீரர்கள் இதற்கு ஒப்புக் கொண்டதாக சோபர் ஜோபன், பிரியங் சக்சேனா பேட்டியில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் 110 சதவிகிதம் இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சூதாட்டம் நடக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர். தற்போது இந்த சம்பவம் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Story first published: Thursday, December 14, 2017, 13:52 [IST]
Other articles published on Dec 14, 2017
English summary
The Sun claimed this week (Complete transcript from The Sun's investigation) undercover reporters had been offered the opportunity to purchase details of supposed rigged periods of play in the match between Australia and England at the WACA – the Test due to get underway on Thursday (December 14).
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X