For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சூதாட்ட புகார்.. 4 கிரிக்கெட் வீரர்களுக்கு 7 முதல் 12 வருடம் தடை.. தென் ஆப்பிரிக்க வாரியம் அதிரடி

By Veera Kumar

கேப்டவுன்: மேட்ச் பிக்சிங் புகாரை தொடர்ந்து, தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் நான்கு பேருக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விளையாட தடை விதித்துள்ளது.

ஜீன் சைம்ஸ், புமேலேலா மட்ஸ்வி, எத்தி மப்லாடி, டெஸ்ட் விக்கெட் கீப்பரான தமி சோலேகிலி ஆகிய நான்கு பேரும் மேட்ச் பிக்சிங் என்னும் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் 7-12 ஆண்டுகள் வரை கிரிக்கெட் விளையாட தடை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.

Match fixing: Four South African cricket players banned by CSA

உள்ளூர் ரேம் ஸ்லாம் டி20 போட்டியில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட முயன்றதாக இவர்களுக்கு இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராக மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள தமி சோலகிலி, 12 ஆண்டுகள் தடைக்கு உள்ளாகியுள்ளார். அவரது ரசிகர்கள் இதனால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

புமேலேலா மட்ஸ்வி மற்றும் எத்தி மப்லாடி ஆகிய இருவருக்கும் 10 ஆண்டுகள் தடையும் ஜீன் சைம்ஸிற்கு 7 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை விதிக்கப்பட்ட நான்கு பேரும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிகம் பரிட்சையம் இல்லாதவர்கள். தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு மேட்ச் பிக்சிங் புகார் புதிது இல்லை. 2000மாவது ஆண்டில் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்த தென் ஆப்பிரிக்க அணியின், கேப்டன் குரோன்யே மீது மேட்ச் பிக்சிங் புகார் எழுந்திருந்தது. ஆனால் விசாரணை நடைபெற்ற நிலையில், 2002ல் நடந்த விமான விபத்தில் குரோன்யே இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, August 8, 2016, 16:04 [IST]
Other articles published on Aug 8, 2016
English summary
Four South African cricketers, including former Test wicketkeeper Thami Tsolekile, have been handed bans by Cricket South Africa for breaching the board's Anti-Corruption Code.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X