For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இது தேவையா பாஸ்? இந்திய வீரர்களை சீண்டி.. டெஸ்டில் எதிர்காலத்தை பறிகொடுத்த ஆஸி.யின் இளம் வீரர்!

சிட்னி: இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமாக ஆடிய ஆஸ்திரேலியாவை சேர்ந்த முக்கியமான வீரர் தற்போது ஆஸ்திரேலிய அணியில் இருந்தே நீக்கப்பட்டு இருக்கிறார்.

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் பல வீரர்கள் மீது கோபத்தில் உள்ளது. அணியில் வாய்ப்பு கிடைத்தும் சரியாக ஆடாத வீரர்கள் பலர் மீது ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் கோபத்தில் உள்ளது.

முக்கியமாக மூத்த வீரர்கள் டேவிட் வார்னர், நாதன் லைன் போன்ற வீரர்கள் சரியான பங்களிப்பை அளிக்கவில்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கோபமாக உள்ளது.

நீக்கம்

நீக்கம்

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமாக ஆடிய ஆஸ்திரேலியாவை சேர்ந்த முக்கியமான வீரர் மேத்யூ வேட் ஆஸ்திரேலிய அணியில் இருந்தே நீக்கப்பட்டு இருக்கிறார். ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா இடையில் அடுத்த மாதம் நடக்க உள்ள டெஸ்ட் தொடரில் இருந்து இவர் நீக்கப்பட்டு உள்ளார். அணி தேர்வில் இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பரபரப்பு

பரபரப்பு

ஆஸ்திரேலியா அணி அடுத்த மாதம் தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. மூன்று டெஸ்ட் போட்டிகள் இதில் நடக்கும். இந்த டெஸ்ட் தொடரில் இருந்துதான் தற்போது மேத்யூ வேட் நீக்கப்பட்டுள்ளார். இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் மேத்யூ வேட் சரியாக ஆடவில்லை.

ஆடவில்லை

ஆடவில்லை

மொத்தம் 4 போட்டிகளில் சராசரியாக இவர் 21 ரன்கள் மட்டுமே எடுத்தார். எந்த போட்டியிலும் அரைசதம் அடிக்கவில்லை. முக்கியமான நேரத்தில் கூட அணிக்காக ஆடவில்லை. ஷாட் தேர்விலும் மேத்யூ வேட் மோசமாக சொதப்பினார்.

சொதப்பல்

சொதப்பல்

இதனால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார். தனது விளையாட்டு மீது கவனம் செலுத்தாமல் இந்திய வீரர்களை ஸ்லெட்ஜ் செய்வதில் அதிக கவனம் செலுத்தினார். இந்திய வீரர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சீண்டினார்.

கவனம்

கவனம்

ஆனால் இவர் தனது தனிப்பட்ட ஆட்டம் மீது கவனம் செலுத்தவில்லை. இதன் காரணமாக தற்போது டெஸ்ட் அணியில் இவர் வாய்ப்பை இழந்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான டி 20 தொடரில் மட்டுமே மேத்யூ வேட் வாய்ப்பு பெற்றுள்ளார். டெஸ்ட் அணிக்கு இவர் மீண்டும் திரும்புவது கடினம் என்று கூறப்படுகிறது.

Story first published: Wednesday, January 27, 2021, 18:53 [IST]
Other articles published on Jan 27, 2021
English summary
Due to poor performance, Mathew Wade loses chance in the Australia test squad against South Africa.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X