For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மாறுவேடம் போட்டு.. பேரம் பேச ஆள் வைத்து.. தி.நகரில் அடாவடி ஷாப்பிங் செய்த ஹெய்டன்!!

சென்னை : முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹெய்டன் வேடிக்கையாக ஏதாவது ஒன்றை செய்வதை வழக்கமாக கொண்டவர்.

இந்த முறை மாறுவேடம் போட்டுக் கொண்டு சென்னை தி.நகரில் தெருவோரக் கடைகளில் ஷாப்பிங் செய்துள்ளார் ஹெய்டன்.

இப்படி கள்ள ஆட்டம் ஆடினா அம்பயர் கிட்ட சொல்லுவோம்.. அநியாயத்தை கண்டு பொங்கிய முகமது கைஃப்!! இப்படி கள்ள ஆட்டம் ஆடினா அம்பயர் கிட்ட சொல்லுவோம்.. அநியாயத்தை கண்டு பொங்கிய முகமது கைஃப்!!

வார்னே விட்ட சவால்

வார்னே விட்ட சவால்

தற்போது ஐபிஎல் தொடருக்காக வர்ணனை செய்து வருகிறார் மேத்யூ ஹெய்டன். இதனிடையே, ஷேன் வார்னே இந்தியாவில் ரூ.1000க்கு கீழ் பொருட்கள் வாங்கிக் காட்டுமாறு விட்ட சவாலை நிறைவேற்ற பல வேடிக்கைகளை செய்துள்ளார்.

மாறுவேடம்

பொய் தாடி வைத்துக் கொண்டு, சட்டை, வேட்டி கட்டிக் கொண்டு, சென்னையின் பரபரப்பான கடைத்தெருவான தி.நகரில் நுழைந்தார் ஹெய்டன். அங்கே இருந்த பிளாட்பாரக் கடைகள் தான் ஹெய்டனின் குறி.

பேரம் பேச ஆள்

பேரம் பேச ஆள்

அங்கே பேரம் பேசி பொருட்களை வாங்க உள்ளூர்க்காரர் ஒருவரை ரூ.100 கொடுத்து அழைத்து சென்றார். தி.நகரில் லுங்கி, சில சட்டைகள், ரஜினி கூலிங் கிளாஸ், வாட்ச் என சில பொருட்களை வாங்கியுள்ளார்.

சாகசப் பயணம்

சாகசப் பயணம்

தன் சாகசப் பயணத்தை இன்ஸ்டாகிராமில் புகைப்படம் மற்றும் வீடியோவாக வெளியிட்டுள்ளார் ஹெய்டன். கடைசியில் தான் வார்னேவிடம் விட்ட சவாலில் வென்று விட்டதாக பெருமைப்பட்டுள்ளார். ஹெய்டன் அலப்பறை தாங்க முடியலையே!

Story first published: Thursday, April 4, 2019, 22:58 [IST]
Other articles published on Apr 4, 2019
English summary
Matthew Hayden shopping on chennai T.Nagar with fake beard
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X