நல்லா தெளிவா இருக்காப்ல.. இவர் தான் கரெக்ட்டு.. இளம் வீரருக்கு ஆதரவாக குதித்த கம்பீர்!

துவக்க வீரராக செயல்படறதுக்கு நல்ல தெளிவு இருக்குது -மயங்க் அகர்வால் குறித்து கவுதம் கம்பீர்

நல்ல தெளிவு அவருக்கு இருக்குது -மயங்க் அகர்வால் குறித்து கவுதம் கம்பீர்

டெல்லி : இந்திய அணியின் துவக்க வீரராக செயல்படுவதற்கான நல்ல மனத்தெளிவு மயங்க் அகர்வாலிடம் உள்ளதாக முன்னாள் துவக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்திடம் கடந்த சர்வதேச ஒருநாள் தொடரை இந்தியா இழந்துள்ள நிலையில், தோல்விக்கு அணியின் வீரர்களை காரணம் கற்பிக்கும் மனநிலை கிரிக்கெட்டில் காணப்படுவதாக கம்பீர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் எதிரணியின் வெற்றியை பாராட்ட கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தொடர்ந்து அடுத்துவரும் போட்டிகளில் சிறப்பாக விளையாட முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

நாளை முதல் டெஸ்ட் போட்டி

நாளை முதல் டெஸ்ட் போட்டி

இந்தியா -நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வெல்லிங்டனில் நாளை துவங்கவுள்ளது. இதற்கென இரு அணிகளும் பங்கேற்ற பயிற்சி ஆட்டமும் நடத்தப்பட்டுள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்க இந்த தொடரை கைகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

ஒருநாள் தொடரில் சொதப்பல்

ஒருநாள் தொடரில் சொதப்பல்

இந்திய அணியின் துவக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், கடந்த ஒருநாள் தொடரில் மயங்க் அகர்வால் களமிறக்கப்பட்டார். ஆனால் அதில் அவர் சொதப்பினார். இதேபோல நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திலும் இந்திய அணியின் பயிற்சி ஆட்டத்திலும் அவர் சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார்.

முன்னாள் துவக்க வீரர் நம்பிக்கை

முன்னாள் துவக்க வீரர் நம்பிக்கை

இந்நிலையில், டெஸ்ட் அணியில் துவக்க வீரராக களமிறங்கவுள்ள மயங்க் அகர்வால் அதில் சிறப்பான அங்கம் வகிப்பார் என்று முன்னாள் துவக்க வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். மயங்க் அகர்வால் மீது தனக்கு அளவுகடந்த நம்பிக்கை உள்ளதாகவும் அவருக்கு துவக்க வீரராக ஆடுவதற்கான மனத்தெளிவு அதிகமாக உள்ளதாகவும் கம்பீர் புகழ்ந்துள்ளார்.

கவுதம் கம்பீர் அறிவுறுத்தல்

கவுதம் கம்பீர் அறிவுறுத்தல்

கிரிக்கெட்டில் தோல்விக்கு அணி வீரர்களை குற்றம் சாட்டும் மனப்போக்கு உள்ளதாக தெரிவித்துள்ள கம்பீர், எதிரணியின் வெற்றியை பாராட்டும் மனோபாவம் ஏன் இருப்பதில்லை என்றும் தொடர்ந்து தங்களது குறைகளை சீர்செய்து அடுத்தக்கட்டத்தை நோக்கி நகரும் தெளிவு ஏன் இருப்பதில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

பிரித்வி ஷா அல்லது சுப்மன் கில்

பிரித்வி ஷா அல்லது சுப்மன் கில்

துவக்க வீரராக விளையாடும் மயங்க் அகர்வாலுடன் பிரித்வி ஷா மற்றும் சுப்மன் கில்லை இந்தியா களமிறக்க வேண்டும் என்றும் கம்பீர் அறிவுறுத்தியுள்ளார். இதன்மூலம் மயங்க் அகர்வால் துவக்க வீரராக சிறப்பான ஆட்டத்தை தருவார் என்றும் அந்த பொறுப்பு அளிக்கப்பட்டால் அதை சிறப்பாக அவர் முடித்து கொடுப்பார் என்றும் கம்பீர் கூறியுள்ளார்.

கங்குலியை Twitterயில் கலாய்த்த மகள் சனா l Sourav Ganguly
கவுதம் கம்பீர் உறுதி

கவுதம் கம்பீர் உறுதி

மயங்க் அகர்வாலுடன் பிரித்வி ஷா அல்லது சுப்மன் கில்லை களமிறக்கும்போது இந்திய அணிக்கு புதிய துவக்க இணை கிடைக்கும் என்றும் கவுதம் கம்பீர் கூறியுள்ளார். தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை பிரித்வி ஷா மற்றும் சுப்மன் கில் எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றும் கம்பீர் கூறினார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Mayank Agarwal has the clarity of mind - Gautam Gambhir
Story first published: Thursday, February 20, 2020, 13:51 [IST]
Other articles published on Feb 20, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X