For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பஞ்சாப் கொடுத்த 14 கோடி நல்லா வேலை செய்யுது..!! இந்திய அணியை காப்பாற்றிய மாயங்..!!

மும்பை; நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் யார் இடம் பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

அப்போது அனைவரின் வாயிலும் வந்தது, ரஹானேவுக்கு வாய்ப்பு கொடுக்கும் பட்சத்தில் விராட் கோலிக்கு பதிலாக மாயங் அகர்வாலை தான் அணியிலிருந்து தூக்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இஷானுக்கு பதிலாக ஏன் சூர்யகுமார்? 3 மிக முக்கிய காரணங்கள்.. கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு! இஷானுக்கு பதிலாக ஏன் சூர்யகுமார்? 3 மிக முக்கிய காரணங்கள்.. கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு!

ஆனால், ரஹானேவுக்கு காயம் ஏற்பட்டதால் ( அப்படினு சொல்றாங்க)..மாயங் அகர்வாலின் இடம் காப்பற்றப்பட்டது. இந்த வாய்ப்பை அவர் நன்கு பயன்படுத்தி கொண்டார் என்றே சொல்ல வேண்டும்.

ஆஸ்திரேலியா தொடர்

ஆஸ்திரேலியா தொடர்

தனது 27வது வயதில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் போது மாயங் அகர்வாலுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதில் மாயங் அகர்வால் பலமான ஆஸ்திரேலிய பந்துவீச்சை எதிர்கொண்டு முதல் இன்னிங்சிலே 76 ரன்களை அடித்தார்.மீண்டும் சிட்னி டெஸ்ட் போட்டியிலும் அவர் 77 ரன்கள் விளாசி தனது இடத்தை பூர்த்தி செய்தார்.

சிறப்பான ஆண்டு

சிறப்பான ஆண்டு

இந்தியா ஏ, உள்ளூர் போட்டியில் கலக்கிய மாயங் அகர்வாலுக்கு, 2019ஆம் ஆண்டு சிறப்பாகவே அமைந்தது.தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இரட்டை சதம், சதம் என விளாசிய அவர், வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இரட்டை சதம் விளாசினார். இதன் மூலம் ஓப்பனராக தனது இடத்தை உறுதிப்படுத்தி கொண்ட மாயங் அகர்வாலுக்கு நியூசிலாந்து சுற்றுப்பயணம் கைக்கொடுக்கவில்லை.இருப்பினும் அவர் ஒரு டெஸ்டில் அரைசதம் விளாசினார்.

நீக்கம்

நீக்கம்

மீண்டும் 2020ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் களமிறங்கிய மாயங் அகர்வால், பெரிதாக சாதிக்கவில்லை. தொடர்ந்து சொதப்பியதாலும், கே.எல்.ராகுல், ரோகித் சர்மா, சுப்மான் கில் ஆகியரின் வருகையாலும் , மாயங் அகர்வாலின் டெஸ்ட் இடம் பறிப்போனது. இருப்பினும் ஐ.பி.எல். போட்டிகளில் பஞ்சாப் அணிக்காக சிறப்பாக விளையாடியதால், தற்போது 14 கோடி ரூபாய்க்கு தக்கவைத்துள்ளார்

Recommended Video

IPL Auction 2022: Retentionsக்கு பிறகு எந்த Teamsக்கு Trouble ஆகும் | OneIndia Tamil
சதம்

சதம்

முதல் டெஸ்டில் சொதப்பிய அகர்வால், மும்பை டெஸ்டில் தனது திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மற்ற வீரர்கள் திணறினாலும், தனது நேர்த்தியான ஆட்டத்தால் அகர்வால் ஆதிக்கம் செலுத்தினார். இதன் மூலம் டெஸ்ட் அரங்கில் தனது 4வது சதத்தை பூர்த்தி செய்தார். 2 ஆண்டுகள், 13 இன்னிங்ஸ்க்கு பிறகு சதம் விளாசி அசத்தியிருக்கிறார் மாயங் அகர்வால்.

Story first published: Friday, December 3, 2021, 19:39 [IST]
Other articles published on Dec 3, 2021
English summary
Mayank Agarwal scored century in Mumbai test. Mayank Agarwal scored century after 13 Innings. Agarwal innings Put India in good Position
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X