For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்ன இவரெல்லாம் தமிழில் பேச ஆரம்பிச்சிட்டாரு.. ஆஸி. களத்தில் ஆதிக்கம் செலுத்தும் தமிழ்.. செம வைரல்

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இன்று முக்கியமான வீரர் ஒருவர் தமிழில் பேசியது பெரிய அளவில் வைரலாகி உள்ளது.

இந்திய அணியில் தற்போது தமிழக வீரர்கள் அதிக அளவில் இடம்பெற்று வருகிறார்கள். மூன்று விதமான பார்மெட்டுகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிட்டனர்.

அதிலும் அஸ்வின் மற்றும் நடராஜன் ஆகிய வீரர்கள் தவிர்க்க முடியாத இடத்தை தொட்டு உள்ளனர். இந்திய அணியில் இவர்கள் இருவரும் இன்னும் சில நாட்களுக்கு அதிகம் செலுத்துவார்கள்.

2021ன் முதல் சதம்... இலங்கைக்கு எதிராக ஜோ ரூட் அபாரம்... வெல்டன் ரூட்!2021ன் முதல் சதம்... இலங்கைக்கு எதிராக ஜோ ரூட் அபாரம்... வெல்டன் ரூட்!

இன்னும் சிலர்

இன்னும் சிலர்

இது போக வாஷிங்க்டன் சுந்தரும் இந்திய அணியில் கவனம் ஈர்க்க தொடங்கி உள்ளார். இந்திய அணியில் தமிழக பவுலர்கள் வலுவாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இதனால் களத்தில் தற்போது தமிழும் கோலோச்ச தொடங்கி உள்ளது.

தமிழ்

தமிழ்

களத்தில் இவர்கள் ஆடும் போது தமிழில் பேசிக்கொள்வது வழக்கமாகி உள்ளது. மாமா இப்படி போடு. மச்சி பந்தை உள்ள போடு என்று தமிழக வீரர்கள் களத்தில் பேசிக்கொள்கிறார்கள். ஸ்டம்பில் இருக்கும் மைக் மூலம் இதுபோன்ற உரையாடல்கள் பதிவாகி வைரலாகி வருகிறது.

எப்படி

எப்படி

களத்தில் தமிழக வீரர்கள் மட்டுமின்றி தென்னிந்திய வீரர்கள் பலரும் தமிழில் பேச தொடங்கி உள்ளனர்.கே. எல் ராகுல் , ஹனுமா விஹாரி, சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு தமிழ் தெரியும் என்பதால் இவர்கள் தமிழில் பேச தொடங்கி உள்ளனர். இதனால் களத்தில் தமிழ் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

நிலைமை

நிலைமை

இப்படிப்பட்ட நிலையில் இன்று அதிசயமாக இன்னொரு வீரரும் தமிழில் பேசினார். மயங்க் அகர்வால் இன்று தமிழக வீரர் நடராஜனுக்கு தமிழில் அறிவுரை வழங்கினார். மச்சி இப்படி போடு, மச்சி பந்தை உள்ளே போடு என்று கூறினார். நல்லா இருக்கு, நல்லா இருக்கு என்று அறிவுரை வழங்கினார்.

கர்நாடகா

கர்நாடகா

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் மயங்க் அகர்வால். ஆனால் இவருக்கு தமிழ் தெரியும் என்பதால் தமிழக வீரர்களிடம் தமிழில் பேசி வருகிறார். இன்றும் இவர் தமிழில் பேசியது களத்தில் பெரிய அளவில் கவனம் ஈர்த்தது. ஷமி போன்ற வடஇந்திய வீரர்களும் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் பேச தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, January 15, 2021, 16:06 [IST]
Other articles published on Jan 15, 2021
English summary
Mayank Agarwal started talking in Tamil with Natarajan in the last test against Australia.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X