For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எப்ப ஆரம்பிக்கலாம்.. எப்படி போகலாம்.. பொறுமையா இருப்போம்.. பிறகு முடிவெடுப்போம்.. எம்சிஏ

மும்பை: மீண்டும் கிரிக்கெட் போட்டிகளை ஆரம்பிப்பது குறித்து நிதானித்து முடிவெடுப்போம் என்று மும்பை கிரிக்கெட் சங்கம் கூறியுள்ளது.

இந்தியாவில் கொரோனா இன்னும் ஓயவில்லை. சொல்லப் போனால் இனிமேல்தான் கொலைவெறி ஆட்டம் போடப் போவதாக சொல்கிறார்கள். எனவே மீண்டும் விளையாட்டுப் போட்டிகளை ஆரம்பிப்பது குறித்து எந்த தெளிவான முடிவையும் யாராலும் எடுக்க முடியவில்லை.

எனவே பொறுத்திருந்து நிதானித்து இதில் செயல்படுவது என்ற முடிவுக்கு மும்பை கிரிக்கெட் சங்கம் வந்துள்ளதாம். குறிப்பாக மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருவதால் இந்த முடிவாம்.

தைரியமா அவர் கையில் கொடுங்க.. கஷ்டப்பட மாட்டார்.. ஏத்தி விடும் பீட்டர்சன்.. தாங்குவாரா பட்லர்தைரியமா அவர் கையில் கொடுங்க.. கஷ்டப்பட மாட்டார்.. ஏத்தி விடும் பீட்டர்சன்.. தாங்குவாரா பட்லர்

போட்டிகள் இல்லை

போட்டிகள் இல்லை

மார்ச் 2வது வாரத்திலிருந்து மும்பையில் ஒரு கிரிக்கெட் போட்டியும் நடைபெறவில்லை. இப்போது மும்பை நகரமானது கொரோனாவின் கட்டுப்பாட்டுக்குள் போய் விட்டது. உயிரிழப்புகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. பாதிப்புகளும் குறைந்த பாடில்லை. மக்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர். உலகிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்றாக மும்பை மாறியுள்ளது.

கூட்டம் கூடி ஆலோசனை

கூட்டம் கூடி ஆலோசனை

இந்த நிலையில் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்க மும்பை கிரிக்கெட் சங்கத்தின் அபெக்ஸ் கவுன்சில் கூடியது. அப்போது மாநில அரசு தரும் உத்தரவுகளின் அடிப்படையில் செயல்படுவது என தீர்மானிக்கப்பட்டது. மீண்டும் கிரிக்கெட் போட்டிகளை தொடங்குவது தொடர்பாக பொருத்திருந்து முடிவெடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

பொறுத்துப் பார்ப்போம்

பொறுத்துப் பார்ப்போம்

தற்போதைய சூழலில் போட்டிகளை நடத்த முடியாத நிலையே காணப்படுகிறது. எனவே மைதானங்களை பராமரிப்பது உள்ளிட்ட பணிகளை இப்போது பார்க்கலாம். போட்டிகள் குறித்து பின்னர் முடிவெடுக்கலாம் என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. மும்பையில், வாக்கிங், ஜாகிங், சைக்ளிங்கை மட்டும்தான் மாநில அரசு தற்போது அனுமதித்துள்ளது. அது கூட கன்டெய்மென்ட் ஜோன்களுக்கு வெளியில்தான்.

இப்போதைக்கு இல்லை

இப்போதைக்கு இல்லை

போட்டிகளை ஆரம்பிப்பது குறித்தோ, பயிற்சி மேற்கொள்வது குறித்தோ இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. குழுவாக இணைந்து எதையும் செய்யவும் தடை உள்ளது. எனவே கிரிக்கெட் பயிற்சிகளை ஆரம்பிப்பது கூட சாத்தியமில்லாததாக உள்ளது. எனவேதான் பொறுத்திருந்து பார்ப்போம் என்ற முடிவுக்கு மும்பை கிரிக்கெட் சங்கம் தள்ளப்பட்டுள்ளது.

Story first published: Tuesday, June 9, 2020, 19:41 [IST]
Other articles published on Jun 9, 2020
English summary
The Mumbai Cricket Association (MCA) adopted a wait and watch approach for resumption of cricket activity
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X