For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“மன்கட்” விதிமுறையில் மாற்றம்.. கிரிக்கெட்டின் முக்கிய முறைகள் மாற்றம்.. அஸ்வினுக்கு கிடைத்த வெற்றி!

மும்பை: கிரிக்கெட்டில் இனி மன்கட் ரன் அவுட் என்பதை அதிகாரப்பூர்வமாக்குவது உள்ளிட்ட பல விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளது.

Recommended Video

New Rules Of Cricket 2022: Mankading To Saliva ban | OneIndia Tamil

கிரிக்கெட் போட்டிகளின் விதிமுறைகளில் மாற்றங்கள் கொண்டு வருவது, புதிய விதிமுறை உருவாக்குவது போன்ற கமிட்டியாக எம்சிசி உள்ளது.

இனி விக்கெட்டுகள் மூலமாக எந்தவொரு சர்ச்சைகளும் ஏற்படாமல் இருப்பதை தடுக்க புதிய விதிமுறைகளை அறிமுகம் செய்துள்ளது.

மன்கட் பிரச்சினை

மன்கட் பிரச்சினை

அதாவது, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஐபிஎல் தொடரில் ஜாஸ் பட்லரை - அஸ்வின் மன்கட் என்ற முறையில் அவுட்டாக்கினார். இது விளையாட்டு முறைகளுக்கு எதிரானது எனக்கூறி அஸ்வின் மீது பல விமர்சனங்கள் குவிந்தன. நான் ஸ்டரைக்கர் எண்டில் உள்ள பேட்ஸ்மேன் பந்துவீசுவதற்கு முன்னதாக கிரீஸை விட்டு வெளியேறினால் ரன் அவுட்டாக்கலாம் என்பது நியாயமான ஒன்று தான் என ஐசிசி அமைதி காத்தது. எனினும் இதனால் சர்ச்சைகள் ஏற்படுகிறது என எந்த வீரர்களும் முயற்சி செய்து பார்க்காமல் உள்ளனர்.

 புதிய விதிமுறை

புதிய விதிமுறை

இந்நிலையில் "மன்கட்" அதிகாரப்பூர்வமான ரன் அவுட்டாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இனி யாரும் இதனை நியாயமற்ற செயல், ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் கிடையாது எனக்கூற முடியாது எனவும் எம்சிசி தெரிவித்துள்ளது. வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பந்தில் எச்சில் தடவுவது

பந்தில் எச்சில் தடவுவது

இதே போல பந்தில் எச்சில் தடுவுவதும் நிரந்தரமாக தடைசெய்யப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீரர்கள், பந்தில் எச்சிலை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டது. ஆனால் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இனி நிரந்தரமாக தடைவிதிக்கப்படுகிறது. இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில், பந்தில் எச்சில் தடவினால் ஸ்விங் ஏற்பட பவுலர்களுக்கு உதவும். ஆனால் பெரிய மாற்றம் ஒன்றும் தெரியவில்லை என்பதால் புதிய விதிமுறை வந்துள்ளது.

ஐசிசி-ன் முடிவு

ஐசிசி-ன் முடிவு

டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் முதல் தான் தொடங்கவுள்ளது. எனவே அதற்கு மட்டும் ஐசிசி நடப்பு விதிமுறைகளை பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் எம்சிசி பரிந்துரைத்துள்ளது. மன்கட் விதிமுறை நியாயமான ஒன்று தான் என்ற அஸ்வினின் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது.

பேட்டிங் மாற்றம்

பேட்டிங் மாற்றம்

இதே போல பேட்டிங்கிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது தற்போது ஒரு பேட்ஸ்மேன் கேட்ச் அவுட்டானால், அந்த கேட்ச் பிடிப்பதற்குள் எதிரே இருக்கும் பேட்ஸ்மேன் ஸ்ட்ரைக்கிற்குள் வந்துவிட்டால் அவர் தான் அடுத்த பந்தில் பேட்டிங் செய்வார். ஆனால் இனி புதிதாக வரும் பேட்ஸ்மேன் தான் அடுத்த பந்தை எதிர்கொள்ள வேண்டும். ஓவரின் கடைசி பந்தில் கேட்ச் ஆனால் மட்டும் எதிரே இருக்கும் பேட்ஸ்மேன் விளையாடலாம்.

Story first published: Wednesday, March 9, 2022, 8:29 [IST]
Other articles published on Mar 9, 2022
English summary
MCC changed the cricket laws, emphasise Mankads as 'legitimate' dismissals
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X