For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

லேட்டா ஆடினா பைன், 5 ரன் ப்ரீ… நோ பால் வீசினா ப்ரீ ஹிட்.. டெஸ்டில் வரப்போகுது புதிய முறை

துபாய்: டெஸ்ட் கிரிக்கெட்டில் நோ பால் வீசினால் ப்ரீ ஹிட் தரலாம் என்று எம்சிசி பரிந்துரைத்துள்ளது.

கிரிக்கெட் ஆட்டங்களுக்கு விதிமுறை பரிந்துரை செய்ய எம்சிசி வேர்ல்ட் கிரிக்கெட் கமிட்டி உள்ளது. இந்த கமிட்டியானது, டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான புதிய பரிந்துரைகளை ஐசிசிக்கு வழங்கியுள்ளது.

பெங்களூருவில் நடைபெற்ற எம்சிசி கூட்டத்தில் அது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டது. அந்த புதிய பரிந்துரைகளில் முக்கியமானது ஒருநாள், டி 20 போல டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் நோ பால்களுக்கு ப்ரீ ஹிட் வழங்கலாம் என்பது தான்.

தினேஷ் கார்த்திக்குக்கு எதிராக அரசியலா? அவருக்கு ஏன் வாய்ப்பு கொடுக்க மாட்டேங்குறாங்க?தினேஷ் கார்த்திக்குக்கு எதிராக அரசியலா? அவருக்கு ஏன் வாய்ப்பு கொடுக்க மாட்டேங்குறாங்க?

வரவேற்பை பெறும்

வரவேற்பை பெறும்

அதன் மற்ற விவரங்கள் வருமாறு:நோ பாலுக்கு ப்ரீ ஹிட் வழங்கினால் அது ரசிகர்களிடையே வரவேற்றை பெறும். ஒருநாள் கிரிக்கெட்டில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு நோ பாலை இங்கிலாந்து வீசியிருக்கிறது.

ப்ரீ ஹிட் அவசியம்

ப்ரீ ஹிட் அவசியம்

ப்ரீ ஹிட் என்பதை உணர்ந்து இருப்பதால் தான் இது நிகழ்ந்திருக்கிறது. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ப்ரீ ஹிட் வழங்குவதன் மூலம் நோ பால்களை குறைக்கலாம்.

டைமர் கிளாக்

டைமர் கிளாக்

டெஸ்டில் ஓவர்களை முடிக்க அதிக நேரங்கள் எடுத்துக்கொள்வதால் அதைச் சரி செய்ய ஸ்கோர்போர்டில் டைமர் கிளாக் பொருத்தப்படும். ஒரு ஓவர் முடிந்தால் கவுண்ட் டவுன் தொடங்கும். ஜீரோவுக்கு வரும் போது பேட்ஸ்மேனும் பவுலரும் ரெடியாக இருக்கவேண்டும்.

எச்சரிக்கை, அபராதம்

எச்சரிக்கை, அபராதம்

ஒரு பேட்ஸ்மேன் அவுட் ஆனாலோ, புதிய பந்துவீச்சாளர் வந்தாலோ 60 நொடிகள், 80 நொடிகளில் ஆட்டம் தொடங்கவேண்டும். அப்படி ஆட்டம் தொடங்காவிட்டால் எச்சரிகையும், அபாரதமும் விதிக்கப்படும். எதிரணிக்கு 5 ரன்கள் தரப்படும்.

ஒரே வகை பந்துகள்

ஒரே வகை பந்துகள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கப்படுவதால் எல்லா டெஸ்டுகளுக்கும் ஒரே வகை பந்துகளைப் பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. எம்சிசியின் இந்த முடிவுகள் ஐசிசிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அவற்றை நடைமுறைப் படுத்தலாமா, வேண்டாமா என்பதை ஐசிசி விரைவில் அறிவிக்கும்.

Story first published: Wednesday, March 13, 2019, 16:02 [IST]
Other articles published on Mar 13, 2019
English summary
MCC world committee suggests standard balls for Test championship.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X