For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாக்., ரசிகர்களால் அச்சுறுத்தலா?.. ஹசன் அலியின் மனைவிக்கு நடந்தது என்ன?

இஸ்லாமாபாத்: டி20 உலககோப்பை 2021 செமி பைனலில் பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் வெற்றி பெரும் என்று கணிக்கப்பட்ட பாகிஸ்தான் தொடரில் இருந்து வெளியேறியது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 176 என்ற சவாலான ஸ்கோரை எட்டியது.

அந்த 3 போட்டிகள்..சர்ச்சை, பரபரப்பு, சுவாரஸ்யம்.. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இடையே உள்ள பங்காளி பகைஅந்த 3 போட்டிகள்..சர்ச்சை, பரபரப்பு, சுவாரஸ்யம்.. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இடையே உள்ள பங்காளி பகை

இமாலய இலக்கை விரட்டிய ஆஸ்திரேலியா பாகிஸ்தான் பந்துவீச்சில் ஆட்டம் கண்டது. ஷாகின் அப்ரிடி ஓவரில் பின்ச் டக் அவுட்டானார். வார்னர் சில சிக்ஸர்களை பறக்க விட்டார். ஆனாலும் சுழலில் மிரட்டிய ஷதாப் கான் மார்ஷ், மேக்ஸ்வெல், ஸ்மித், வார்னர் என்று வரிசையாக அவுட் செய்தார். இதனால் ஆஸ்திரேலியா 96-5 என்று நிலைகுலைந்து போனது.

ஹசன் அலி தவற விட்ட கேட்ச்

ஹசன் அலி தவற விட்ட கேட்ச்

ஆனால் மேத்யூ வேட்டும், மார்கஸ் ஸ்டோனிசும் சரிந்து கிடந்த அணியை தூக்கி நிறுத்தினார்கள். கடைசி 2 ஓவர்களில் 22 ரன்கள் தேவைப்பட்டது. ஷாகின் அப்ரிடியின் 19-வது ஓவரில் மேத்யூ வேட் பந்தை தூக்கியடித்தபோது எளிதான அந்த கேட்சை பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி தவற விட்டார்.

இதனை தொடர்ந்து அடுத்த 3 பந்துகளில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி ஆஸ்திரேலியா அணியை பைனலுக்கு கொண்டு சென்றார் மேத்யூ வேட்.

ஹசன் அலி மீது விமர்சனம்

ஹசன் அலி மீது விமர்சனம்

ஹசன் அலியின் கேட்ச் டிராப்பே பாகிஸ்தான் தோல்வி அடைய முழு காரணமாகி விட்டது. இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் ஹசன் அலியை போட்டு திட்டி தீர்த்து வந்தனர். அவரை மட்டுமில்லாது குடும்பத்திற்கு ரசிகர்களிடம் இருந்து மிரட்டல்கள் வருவதாக தகவல் வெளியானது ஹசன் அலியின் மனைவி ஷமியா அர்ஸு இந்தியாவின் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். அவர் அமீரகத்தில் வேலை பார்த்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டனர்.

ஹசன் அலி மனைவி

ஹசன் அலி மனைவி

ஷமியா அர்ஸு இசுலாமியத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இதனால் அவரது டுவிட்டர் கணக்கில் சென்று பாகிஸ்தான் ரசிகர்கள் அவரையும், குழந்தைகளையும் திட்டி வருவதாகவும், இதனை தடுத்து நிறுத்தும்படி ஷமியா அர்ஸு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வேண்டுகோள் விடுத்தபடி ஷமியா அர்ஸு பெயரில் டுவிட்டர் பதிவுகள் வெளிவந்தன.

இன்ஸ்டாகிராமில் விளக்கம்

இன்ஸ்டாகிராமில் விளக்கம்

இந்த நிலையில் ஹசன் அலியின் மனைவி ஷமியா அர்ஸு இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் போஸ்ட் வெளியிட்ட அவர், '' பாகிஸ்தான் ரசிகர்களிடம் இருந்து எனக்கோ, எனது கணவருக்கோ, மகளுக்கோ அச்சுறுத்தல்கள் வரவில்லை. சமுக வலைதளங்கள் வழியாக அச்சுறுத்தல் வந்ததாக கூறப்படுவது முற்றிலும் தவறானது. நான் டுவிட்டரில் இல்லை. எனது பெயரில் வரும் டுவிட்டர் அக்கவுண்ட் போலியானது'' என்று கூறியுள்ளார்.

Story first published: Monday, November 15, 2021, 16:18 [IST]
Other articles published on Nov 15, 2021
English summary
The wife of Pakistan cricketer Hasan Ali has explained that she and her husband were not threatened by the fans. she added I'm not on Twitter. The Twitter account in my name is fake''
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X