For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய அணி வெற்றி.. வெற்றி... ஆஸி.,யை 137 ரன்கள் வித்தியாசத்தில் வென்று முன்னிலை

By Alagesan

மெல்போர்ன்: 37 ஆண்டுகளுக்குப் பின் மெல்போர்ன் மைதானத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றிக்கொடியை நாட்டியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

இந்திய அணி டிக்ளேர்

இந்திய அணி டிக்ளேர்

புஜாரா (106), விராட் கோலி (82), ரோகித் சர்மா (63) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் மெல்போர்னில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. பின்னர், முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சால், 151 ரன்களில் சுருண்டது. பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆஸ்திரேலியா பலோ ஆன் கொடுக்காமல், 296 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2-ம் இன்னிங்சை தொடங்கியது. 3-ம் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்திருந்தது.4-ம் நாள் ஆட்டம் நேற்று தொடர்ந்த நிலையில், 8 விக்கெட்டுகளுக்கு 106 ரன்கள் எடுத்து இந்திய அணி டிக்ளேர் செய்தது.

ஆஸி., சொதப்பல்

ஆஸி., சொதப்பல்

இதன்மூலம், 399 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆஸ்திரேலியா தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்கவீரர்கள் பிஞ்ச் (3) மற்றும் ஹாரிஸ் (13) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கவாஜா (33), ஷேன் மார்ஷ் (44), மிச்செல் மார்ஷ் (10), டிராவிஸ் ஹெட் (34) ஆகியோர் சீரான இடைவெளியில் வெளியேறினர். இதனையடுத்து, ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்திருந்தது. கம்மின்ஸ் 61 ரன்னுடனும், நாதன் லயன் 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்தியா முன்னிலை

இந்தியா முன்னிலை

இன்று ஐந்தாவது நாள் ஆட்டம் நடைபெற்றது. காலையில் மழை பெய்ததால் மதிய உணவு இடைவேளை வரை ஆட்டம் தொடங்கவில்லை. பின்னர் மதிய உணவு இடைவேளைக்குப்பின் ஆட்டம் தொடங்கியது. கம்மின்ஸ் 63 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். நாதன் லயன் 7 ரன்கள் எடுத்த நிலையில் இஷாந்த் சர்மா பந்தில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா 261 ரன்னில் ஆல்அவுட் ஆனது.இதனால் இந்தியா 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா 2-1 என தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.

150 வது வெற்றி

150 வது வெற்றி

37 ஆண்டுகளுக்குப் பின் மெல்போர்ன் மைதானத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றிக்கொடியை நாட்டியுள்ளது. சர்வதேச டெஸ்ட் போட்டியில் இந்தியா பெறும் 150-வது வெற்றி இதுவாகும்.கடைசி டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றாலும், தொடர் சமன் அடையும் என்பதால், பார்டர் - கவாஸ்கர் கோப்பையை இந்தியா தக்கவைத்துள்ளது.

Story first published: Sunday, December 30, 2018, 9:18 [IST]
Other articles published on Dec 30, 2018
English summary
India retained the Border-Gavaskar Trophy after wrapping up a 137-run win over Australia in the third Test in Melbourne on Sunday
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X