For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

10 வருட கால்பந்து வரலாற்றில் பக்கா வீரர் மெஸ்ஸிதான்.. பீலே புகழாரம்

கொல்கத்தா: கடந்த பத்து வருட கால கால்பந்து வரலாற்றில் மிக அற்புதமான வீரர் யார் என்றால் அது அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்ஸிதான் என்று பிரேசில் ஜாம்பவான் பீலே கூறியுள்ளார்.

அதேசமயம், தனது நாட்டைச் சேர்ந்த இளம் புயல் நெய்மார் மற்றும் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோரையும் குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது என்றும் பீலே கூறியுள்ளார்.

கொல்கத்தா வந்துள்ள பீலே இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுத்தார். அப்போதுதான் இந்த வீரர்களைப் பற்றி புகழ்ந்து பேசினார் பீலே.

பீலேவின் பேட்டியிலிருந்து...

ரொம்பக் கஷ்டம்

ரொம்பக் கஷ்டம்

பல்வேறு தலைமுறை வீரர்களை ஒப்பிட்டுப் பார்ப்பது ரொம்பக் கஷ்டமான விஷயம். இருப்பினும் கடந்த பத்து ஆண்டுகளில் யார் அபாரமான வீரர் என்றால் அது மெஸ்ஸிதான்.

செம ஸ்டைல்

செம ஸ்டைல்

ரொனால்டோ முன்களத்தில் சிறப்பாக ஆடுகிறார் என்றால் மெஸ்ஸி பல்வேறு வகையான திறமைகளுடன் அனைத்து நிலைகளிலும் அசத்தலாக ஆடுவார்.

இரண்டு பேரும் பெஸ்ட்தான்

இரண்டு பேரும் பெஸ்ட்தான்

எனது தலைமையில் அணி அமைந்தால் இந்த இரண்டு வீரர்களையும் அதில் சேர்க்கவே நான் விரும்புவேன். காரணம், இருவருமே சிறந்த வீரர்கள்தான்.

நெய்மாரை மறந்துடாதீங்க

நெய்மாரை மறந்துடாதீங்க

எங்களிடமே ஒரு திறமையாளர் இருப்பதையும் மறந்து விடக் கூடாது. நெய்மாருக்கு மிகச் சிறந்த எதிர்காலம் உள்ளது. அவரும் சிறப்பான வீரர்தான்.

போட்டி மிகுந்த உலகம்

போட்டி மிகுந்த உலகம்

இப்போது கால்பந்து உலகம் மிகுந்த போட்டிகளுடன் கூடியதாக உள்ளது. எனவே கால்பந்து விளையாட வாய்ப்பு கிடைத்தாலே அது கடவுள் கொடுத்த வரம்தான். இன்று என்றில்லை, எங்களது காலத்திலும் கூட போட்டி கடுமையாகவே இருந்தது.

திறமை மட்டும்தான்

திறமை மட்டும்தான்

கால்பந்து விளையாட்டில் திறமை மட்டுமே எடுபடும். வேறு எதற்குமே அங்கு வேலை இல்லை. கால்பந்து மீதான ஆர்வம் என்னைப் போன்ற பழையவர்களிடம் இன்னும் அப்படியேதான் உள்ளது. அது போகாது.

பிரேசிலில் சிறந்த வீரர்கள்

பிரேசிலில் சிறந்த வீரர்கள்

பிரேசில் நாட்டில் மிகச் சிறந்த கால்பந்து வீரர்கள் உள்ளனர். தனிப்பட்ட முறையில் திறமை படைத்தவர்கள் பலரும் உள்ளனர். ஆனால் கால்பந்து என்பது குழு விளையாட்டு.

பழைய பிரேசிலாக இல்லை

பழைய பிரேசிலாக இல்லை

இருப்பினும் பழைய பிரேசில் அணியாக தற்போதைய அணி இல்லை என்பதை மறுக்க முடியாது. காரணம், அணியில் நிலவும் சூழல் அப்படி. நல்ல வீரர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் ஒரு அணியாக அவர்கள் வெற்றி பெற தவறி விடுகிறார்கள். அனைவரும் சேர்ந்து விளையாடினால் மட்டுமே வெற்றி சாத்தியம். துரதிர்ஷ்டவசமாக அது இல்லாமல் போய் விட்டது என்றார் பீலே.

Story first published: Monday, October 12, 2015, 18:01 [IST]
Other articles published on Oct 12, 2015
English summary
Football legend Pele today termed Argentine forward Lionel Messi as the "best in last 10 years", but also spoke highly of his fellow Brazilian Neymar and Portugal's Ronaldo. "It's very difficult to make a comparison of players of different generations. But in last 10 years Messi was the best. Ronaldo plays forward and tries to score while Messi plays with a different style. In my team I would love to have both... We have Neymar who also has good future," the only footballer to have won three World Cups said in his first news conference during his one-week sojourn in India.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X