அர்ஜூன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது ஏன்? மும்பை தோல்விக்கு காரணம் - உண்மையை உடைத்த பாண்ட்

மும்பை: நடப்பு ஐபிஎல் தொடரில் அர்ஜூன் டெண்டுல்கருக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்பவில்லை என்பது குறித்து மும்பை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஷேன் பாண்ட் தெரிவித்துள்ளார்.

நடப்பு தொடரில் மும்பை அணி 14 போட்டியில் விளையாடி 4 போட்டிகளை மட்டுமே வென்று கடைசி இடத்தை பிடித்தது.

இது குறித்து பேசிய ஷேன் பாண்ட், மும்பை அணியில் பல திறமையான வீரர்கள் இருந்தும், தொடரை முடிவடைய போது தான் அவர்கள் கிளிக் ஆனதாக தெரிவித்தார்.

சவால்கள் இருந்தன

சவால்கள் இருந்தன

எங்கள் அணியின் செயல்பாடுகளால் எங்கள் மீது அதீத எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், எங்கள் அணியில் முற்றிலும் இளம் வீரர்களாக இருந்தனர். இதனால், எங்களுக்கு அவர்களை தயார் படுத்துவதில் சவாலாக இருந்தது. ஆனால் கேப்டன் ரோகித் சர்மா தன் பணியை சிறப்பாக செய்தார். ஒவ்வொரு வீரரிடம் பேசி இளம் வீரர்களை தயார் படுத்தினார். அதன் விளைவு தான் தொடர் முடிவில் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.

இளம் வீரர்கள்

இளம் வீரர்கள்

டிம் டேவிட் போன்ற இளம் வீரர்கள் தொடர் முடிவடையும் போது சிறப்பாக விளையாடினார். இதனால் மும்பை அணியின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் மிகவும் கடினமாகவும், சவால்கள் நிறைந்ததாகவும் இருந்தது. நடப்பு சீசனில் இளம் வீரர்கள் விளையாடி நல்ல அனுபவத்தை பெற்றுள்ளனர்.

பந்துவீச்சு கூட்டணி

பந்துவீச்சு கூட்டணி

ஜோப்ரா ஆர்ச்சர் காயமாக இருந்தாலும், அவரை எதிர்காலத்தில் மனதை வைத்து தான் அணியில் தேர்வு செய்தோம். ஜோப்ரா ஆர்ச்சர் , பும்ரா இருவரும் பந்துவீச்சில் இணைந்தால் எதிர் அணி வீரர்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்துவார்கள். நடப்பு சீசனில் பும்ராவும் எங்களுக்கு முக்கிய போட்டியில் சிறப்பாகவே பந்துவீசினார். எங்களுக்கு சில போட்டிகளில் வெற்றி வாய்ப்பு இருந்தும் வீணாக்கி விட்டோம்.

அர்ஜூன் டெண்டுல்கர்

அர்ஜூன் டெண்டுல்கர்

அர்ஜூன் டெண்டுல்கர் பிளேயிங் லெவனில் இல்லாதது குறித்து பல கேள்விகள் எழுப்பபட்டது. ஆனால் அர்ஜூன் தனது பேட்டிங் மற்றும் பில்டிங்கில் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டிய தேவை உள்ளது. அணியில் இடத்தை பிடிக்க நாம் கடுமையாக உழைக்க வேண்டும். அடுத்த சீசனில் அவர் அதனை சரி செய்வார் என நம்பிகிறேன். இனி வரும் சீசன்களில் சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
MI Bowling coach shane bond on Reason for team loss அர்ஜூன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது ஏன்? மும்பை தோல்விக்கு காரணம் - உண்மையை உடைத்த பாண்ட்
Story first published: Friday, June 3, 2022, 10:06 [IST]
Other articles published on Jun 3, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X