For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நீங்க செஞ்சதுதான் சரி... இந்த நேரத்துல இப்படிதான் முடிவெடுக்கணும்... பாராட்டிய ஹிட்மேன்!

ஐபிஎல் 2021 தொடர் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தற்போது வெளிநாட்டு வீரர்கள் தங்களது நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.

'யாருமே கவனிக்கல’.. ஐபிஎல்-ல் சத்தமே இல்லாமல் சாதித்த இளம் வீரர்.. தேடிபிடித்து புகழ்ந்த சேவாக்! 'யாருமே கவனிக்கல’.. ஐபிஎல்-ல் சத்தமே இல்லாமல் சாதித்த இளம் வீரர்.. தேடிபிடித்து புகழ்ந்த சேவாக்!

இந்நிலையில் பிசிசிஐயின் இந்த முடிவுக்கு ஹிட்மேன் ஆதரவை தெரிவித்துள்ளார்.

ஒத்திவைக்கப்பட்ட தொடர்

ஒத்திவைக்கப்பட்ட தொடர்

ஐபிஎல் 2021 தொடர் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மீணடும் எப்போது எங்கே நடக்கும் என்பது குறித்து தற்போதைக்கு எந்த முடிவையும் எடுக்காமல் பிசிசிஐ அடுத்தடுத்த தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறது. தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதையடுத்து வெளிநாட்டு வீரர்களும் தங்களது நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.

தொடர் வெற்றி

தொடர் வெற்றி

இந்த தொடரில் ஆரம்பத்தில் சென்னையில் 5 போட்டிகளை விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து சொதப்பியது. 2 போட்டியில் மட்டுமே வெற்றி கொண்டது. ஆனால் டெல்லிக்கு போட்டிகள் மாற்றப்பட்டவுடனே தொடர்ந்து வெற்றிகளை பெறத் துவங்கியது.

தடைபட்ட கனவு

தடைபட்ட கனவு

தொடர்ந்து ஹாட்ரிக் கோப்பை வெற்றியை பெற வேண்டும் என்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கனவு தற்போது தடை பட்டுள்ளது. இந்த தொடர் தொடர்ந்து நடைபெறும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் மீண்டும் தனது கனவை துரத்தும். அப்போது அதன் கனவு நனவாகவும் வாய்ப்புள்ளது.

அணி வீரர்கள் பேச்சு

ஐபிஎல் தடைபட்டுள்ள போதிலும் முமபை இந்தியன்ஸ் அணி தங்களுடைய சார்ட்டர்ட் விமானங்களில் வெளிநாட்டு வீரர்களை அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மும்பை இந்தியன்ஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் ரோகித் சர்மா, ஜஸ்பிரீத் பும்ரா, ஆடம் மில்னே, ஜெயந்த் யாதவ், ஷேன் பாண்ட் மற்றும் ராபின் சிங் ஆகியோர் பேசியுள்ளனர்.

பிசிசிஐக்கு ரோகித் பாராட்டு

பிசிசிஐக்கு ரோகித் பாராட்டு

குறிப்பாக நாட்டில் தற்போது நிகழ்ந்துவரும் பிரச்சினைகளுக்கிடையில் ஐபிஎல் போட்டிகளை தள்ளிவைக்கும் பிசிசிஐயின் முடிவு சிறப்பானது என்று தெரிவித்துள்ளார். மேலும் ரசிகர்களை பாதுகாப்பாக இருக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதேபோல மற்ற வீரர்களும் அந்த வீடியோவில் பேசியுள்ளனர்.

Story first published: Thursday, May 6, 2021, 19:15 [IST]
Other articles published on May 6, 2021
English summary
I think it's a very good decision -Rohit Sharma
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X