For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

செம ஸ்பின்.. கஷ்டமான கேட்ச்.. ஜடேஜா - தோனியிடம் சிக்கி விக்கெட்டை பறிகொடுத்த ரோஹித் சர்மா!

Recommended Video

தோனியிடம் சிக்கி விக்கெட்டை பறிகொடுத்த ரோஹித் சர்மா!

மும்பை : 2019 ஐபிஎல் தொடரின் 15வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

1
45771

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது மும்பை இந்தியன்ஸ் அணி. அந்த அணியின் துவக்க வீரர்கள் டி காக் 4 ரன்களில் தீபக் சாஹர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து ரோஹித் சர்மா - சூர்யகுமார் யாதவ் ஆடி வந்தனர்.

அங்கேயும் நாங்க தான்.. எங்கேயும் நாங்க தான்.. ட்விட்டரில் கெத்து காட்டும் சிஎஸ்கே & தோனி! அங்கேயும் நாங்க தான்.. எங்கேயும் நாங்க தான்.. ட்விட்டரில் கெத்து காட்டும் சிஎஸ்கே & தோனி!

ஜடேஜாவை அழைத்த தோனி

ஜடேஜாவை அழைத்த தோனி

ரோஹித் சர்மா ரன் அடிக்கத் திணறி வந்தார். அப்போது 7வது ஓவரை வீச ஜடேஜாவை அழைத்தார் தோனி. ரோஹித் சர்மாவிற்கு முதல் பந்தை வீசினார் ஜடேஜா. ரோஹித் அதை தடுத்து ஆட முற்பட்டார். ஆனால், பந்து திசை மாறி வரவே, பேட்டில் எட்ஜ் ஆகியது.

கடினமான கேட்ச்

பின்னே நின்றிருந்த தோனி கடினமான அந்த கேட்சை பிடித்தார். பேட்டில் எட்ஜ் ஆன பந்து ஆஃப் ஸ்டம்ப்புக்கு சில சென்டிமீட்டர் இடைவளியில் சென்றது. இது போன்ற கேட்ச்களை விக்கெட் கீப்பர்கள் பிடிப்பது கடினம். எனினும், அனுபவ வீரர் தோனி கேட்சை சரியாகப் பிடித்தார். மேலும், இமைக்கும் நொடிக்குள் மற்றொரு முன்னெச்சரிக்கையாக ஸ்டம்பிங்கையும் செய்தார்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

ரோஹித் சர்மா 18 பந்துகளை சந்தித்து 13 ரன்கள் மட்டுமே எடுத்து நடையைக் கட்டினார். ரோஹித் சர்மா சென்னை அணிக்கு எதிராக நிறைய ரன்கள் குவித்துள்ளார் என போட்டிக்கு முன்பு கூறப்பட்டது.

மும்பை ரசிகர்கள் ஏமாற்றம்

மும்பை ரசிகர்கள் ஏமாற்றம்

அதனால், இந்த போட்டியில் ரோஹித் சர்மா தெறிக்கவிடப் போகிறார் என மும்பை ரசிகர்கள் காத்துக் கொண்டு இருந்தனர். ஆனால், ரோஹித் சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

Story first published: Wednesday, April 3, 2019, 23:00 [IST]
Other articles published on Apr 3, 2019
English summary
MI vs CSK : Rohit Sharma caught by Dhoni behind the stumps
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X