For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தம்பி ரிஷப் பண்ட்.. என்ன அடி அடிச்சாலும்.. உங்களால சுரேஷ் ரெய்னாவை தொட முடியலையே!!

மும்பை : 2019 ஐபிஎல் தொடரின் மூன்றாவது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் டெல்லி அணியின் ரிஷப் பண்ட் அதிரடி காட்டி மும்பை அணியை மிரள வைத்தார். அவர் வெறும் 27 பந்துகளில் 78 ரன்கள் அடிக்க, டெல்லி அணியின் ஸ்கோர் எக்குத்தப்பாக உயர்ந்தது.

6 பவுலர்கள்.. ம்ஹூம்.. ஒரு பிரயோஜனமும் இல்ல... சொதப்பியது தான் மிச்சம்.. புலம்பிய டான் ரோகித் 6 பவுலர்கள்.. ம்ஹூம்.. ஒரு பிரயோஜனமும் இல்ல... சொதப்பியது தான் மிச்சம்.. புலம்பிய டான் ரோகித்

அதிகமா இருக்கே

அதிகமா இருக்கே

ரிஷப் பண்ட்டின் அதிரடி ஆட்டத்தில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 288.88 ஆக இருந்தது. "இத்தனை பந்துகளை சந்தித்தும், ஸ்ட்ரைக் ரேட் அதிகமா இருக்கே" என நாம் நினைத்தால், ரிஷப் பண்ட்டை விட அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ஒரு போட்டியில் வெளுத்திருக்கிறார் சுரேஷ் ரெய்னா.

சுரேஷ் ரெய்னா

சுரேஷ் ரெய்னா

ஐபிஎல் போட்டிகளில் 25+ பந்துகள் சந்தித்த பின் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்த பேட்டிங் இன்னிங்க்ஸ்களை கணக்கில் எடுத்துக் கொண்டால், சுரேஷ் ரெய்னா 25 பந்துகளில் 87 ரன்கள் அடித்ததே முதல் இடத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 348 ஆகும்.

2014 ஐபிஎல் தொடரில்..

2014 ஐபிஎல் தொடரில்..

2014 ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 227 ரன்கள் என்ற இலக்கை துரத்தி 202 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. அந்த போட்டியில் சுரேஷ் ரெய்னா 25 பந்துகளில் 87 ரன்கள் எடுத்தார்.

இரண்டாம் இடம்

இரண்டாம் இடம்

அதற்கடுத்த இன்னிங்க்ஸ் ஆக மும்பை அணிக்கு எதிராக நேற்று ரிஷப் பண்ட் ஆடிய ஆட்டம் இடம் பெற்றுள்ளது. 27 பந்துகளில் 78 ரன்கள் எடுத்தார். ஸ்ட்ரைக் ரேட் 288.88. ரிஷப் பண்ட் நேற்று ஆடிய ஆட்டம் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனாலும், ரிஷப் பண்ட்டால், சுரேஷ் ரெய்னாவின் அதிரடியை ஈடுகட்ட முடியவில்லை.

மூன்றாம் இடம் யாருக்கு?

மூன்றாம் இடம் யாருக்கு?

இந்தப் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்திருப்பவர் இர்பான் பதான் என்பது ஆச்சரியமான தகவல். பதான் 37 பந்துகளில் 100 ரன்கள் அடித்தது மூன்றாம் இடம் பிடித்துள்ளது. இதன் ஸ்ட்ரைக் ரேட் 270.27.

Story first published: Monday, March 25, 2019, 11:43 [IST]
Other articles published on Mar 25, 2019
English summary
MI vs DC IPL 2019 : Rishabh Pant can’t beat Suresh Raina
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X