For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

5 வருடம் காத்திருந்து ரோஹித் இடத்தை பிடித்த இளம் வீரர்.. கேப்டன் பதவியில் அமர்ந்த பொல்லார்டு!

மும்பை : 2019 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் மோதிய போட்டியில் காயம் காரணமாக ரோஹித் சர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

அதையடுத்து அந்த அணியில் நீண்ட நாட்களாக ஆடிவரும் கீரான் பொல்லார்டு கேப்டன் பொறுப்பை ஏற்றார். ரோஹித் சர்மாவிற்கு பதில் இளம் வீரர் ஒருவர் அணியில் ஆடும் வாய்ப்பு பெற்றார்.

11 வருஷமா ஒரு ஐபிஎல் போட்டி விடாமல் ஆடிய ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு.. ரோஹித்துக்கு என்னாச்சு? 11 வருஷமா ஒரு ஐபிஎல் போட்டி விடாமல் ஆடிய ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு.. ரோஹித்துக்கு என்னாச்சு?

கேப்டன் கீரான் பொல்லார்டு

கேப்டன் கீரான் பொல்லார்டு

ரோஹித் சர்மாவுக்கு பயிற்சியின் போது வலது காலில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவருக்கு ஓய்வளிக்க மும்பை அணி நிர்வாகம் முடிவு செய்தது. கேப்டனான ரோஹித் சர்மா ஓய்வு பெற்ற நிலையில், தற்காலிக கேப்டனாக அனுபவ டி20 வீரர் கீரான் பொல்லார்டை நியமித்தது மும்பை.

சாம்பியன்ஸ் லீக் கேப்டன்

சாம்பியன்ஸ் லீக் கேப்டன்

கீரான் பொல்லார்டு ஐபிஎல் தொடரில் சுமார் 137 போட்டிகளில் பங்கேற்ற பின் கேப்டன் பதவியில் அமர்ந்துள்ளார். இடையே அவர் மூன்று போட்டிகளுக்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார். ஆனால், அவர் மூன்றும் சாம்பியன்ஸ் லீக் தொடரில் நடந்த போட்டிகள்.

இளம் வீரர்

இளம் வீரர்

ரோஹித் சர்மா ஆடாத நிலையில், அவருக்கு பதில் சித்தேஷ் லாட் என்ற இளம் வீரர் மும்பை அணியில் தன் முதல் போட்டியில் களம் இறங்கும் வாய்ப்பைப் பெற்றார். இவர் கதை கொஞ்சம் பரிதாபமாகவே உள்ளது.

வாய்ப்பில்லாத பரிதாபம்

வாய்ப்பில்லாத பரிதாபம்

கடந்த 2015 முதல் மும்பை அணியில் இடம் பெற்று இருக்கும் சித்தேஷ், இது வரை ஒரு ஐபிஎல் போட்டியில் கூட ஆடவில்லை. முதல் தர போட்டிகள், லிஸ்ட் ஏ போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார் சித்தேஷ்.

ரோஹித் இடத்தை பிடித்தார்

ரோஹித் இடத்தை பிடித்தார்

சுமார் 5 ஆண்டுகள் தன் முதல் ஐபிஎல் போட்டிக்காக காத்திருந்த சித்தேஷ் லாட், ரோஹித் சர்மா இடத்தை பிடித்தார். ரோஹித் சர்மாவிற்கு பதில் துவக்க வீரராக பஞ்சாப் போட்டியில் களமிறங்கினார். 13 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே அடித்து வெளியேறினார். எனினும், தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அனைவரையும் திகைக்க வைத்தார்.

Story first published: Wednesday, April 10, 2019, 22:49 [IST]
Other articles published on Apr 10, 2019
English summary
MI vs KXIP IPL 2019 : Kieron Pollard and Siddhesh Lad got chance after long time
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X