For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மூன்றே வார்த்தையில் டிவில்லியர்ஸ் அட்வைஸ்...முக்கிய விஷயத்தை கற்ற கோலி... ஓப்பனிங் ரகசியம் உடைந்தது

சென்னை: இந்தாண்டு ஐபிஎல்ப்-ல் ஓப்பனிங் களமிறங்குவதின் சூத்திரத்தை விராட் கோலி தெரிவித்துள்ளார்.

14வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் அணி மோதவுள்ளது.

இன்னைக்கு இந்த விஷயம் துண்டா தெரியும்.. கோலியின் பலவீனத்தை உடைத்த முன்னாள் வீரர்.. கதை முடிந்தது!இன்னைக்கு இந்த விஷயம் துண்டா தெரியும்.. கோலியின் பலவீனத்தை உடைத்த முன்னாள் வீரர்.. கதை முடிந்தது!

இப்போட்டியில் மும்பை அணிக்கு தொடக்கம் முதலே அச்சுறுத்தல் தரும் வகையில் விராட் கோலி ஓப்பனிங் களமிறங்க போவதாக அறிவித்துள்ளார். இதற்காக டிவில்லியர்ஸுடம் முக்கிய ஆலோசனையையும் விராட் கோலி.

ஓப்பனிங் வீரர்

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ஓப்பனிங் களமிறங்கிய விராட் கோலி, 52 பந்துகளில் 80 ரன்களை விளாசி அதிரடி காட்டினார். அவரின் ஓப்பனிங் பொஷிசன் சிறப்பாக இருந்ததாக பேசப்பட்டதால் ஐபிஎல் தொடரிலும் ஓப்பனிங் களமிறங்க போவதாக கோலி அறிவித்தார். இதனால் கடந்த 2016ம் ஆண்டை போல விராட் கோலியின் ருத்ரதாண்டவத்தை பார்ப்போமா என எதிரணிகள் சற்று கலக்கத்தில் உள்ளனர். ஏனென்றால் கோலி அந்தாண்டு 973 ரன்களை குவித்தார்.

திட்டம்

திட்டம்

இந்நிலையில் தனது முடிவு குறித்து பேசியுள்ள கோலி, நான் அணியின் பயிற்சியாளர்கள், மைக் ஹிசன் மற்றும் சிம்மான் கடிச் ஆகியோரிடம் கடந்த சீசனின் போதே 2021ம் ஆண்டு ஓப்பனிங் ஆடவுள்ளேன் எனக்கூறினேன். இங்கிலாந்து தொடரில் நான் நினைத்தது போலவே ஓப்பனிங் நன்றாக கைக்கொடுத்தது. இதனால் அணிக்கு நல்ல ஸ்கோர் கிடைத்தது. அந்த நம்பிக்கையே மீண்டும் ஐபிஎல்-லும் ஓப்பனிங் களமிறங்க தூண்டியது என தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து தொடரின் அனுபவம் தான் இந்த ஐபில்-ல் களமிறங்கு மிக உதவியாக உள்ளது. அதனை வைத்து அணியின் பேட்டிங் வரிசையில் பேலன்ஸ் செய்ய வேண்டும்.

அறிவுரை கேட்ட் கோலி

அறிவுரை கேட்ட் கோலி

சென்னை பேட்ஸ்மேன்களுக்கு சற்று கடினமான பிட்ச் ஆகும். எனவே இந்த பிட்ச்களில் செயல்படுவது குறித்து டிவில்லியர்ஸிடம் ஆலோசனை பெற்றதாக கோலி கூறியுள்ளார். நம்மால் ரன் எடுக்க முடியாத பிட்ச்களில் சிறப்பாக செயல்பட முயற்சிப்பது மிகச்சிறப்பானதாகும். அந்த நேரங்களில் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாது எனவே நான் அதுகுறித்து டிவில்லியர்ஸிடம் கேட்டேன்.

 அட்வைஸ்

அட்வைஸ்

நான் டிவில்லியர்ஸின் ஆட்டத்தை பார்த்துள்ளேன். அவர் அனைத்து நேரங்களிலும் தான் ரன் எடுக்க வேண்டும் என இருக்க மாட்டார். அணியின் நிலைமையையும் புரிந்துக்கொள்வார். எனவே நான் அவரிடம் ஆலோசனை கேட்டபோது அவர் எனக்கு மிகவும் சுலபமாக கொடுத்த அட்வைஸ் பந்தை சரியாக பார்த்து விளையாடுங்கள் என்பதுதான்.

 கோலியின் மனவருத்தம்

கோலியின் மனவருத்தம்

13 வருடங்களாகியும் ஆர்சிபி அணியுடன் இணைந்திருப்பது பற்றி பேசிய கோலி, நாங்கள் ஐபிஎல்-ல் 3 முறையும், சாம்பியன் லீக்கில் 1 முறையும் இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளோம். அதே போன்று 2- 3 முறை அரையிறுதிக்கு சென்றுள்ளோம். எனினும் நாங்கள் இன்னும் கோப்பையை மட்டும் வெல்லவில்லை. அது எங்கள் கடமை. நான் அதை விட்டு விலகி செல்ல எண்ணவில்லை என தெரிவித்தார்.

Story first published: Friday, April 9, 2021, 22:29 [IST]
Other articles published on Apr 9, 2021
English summary
Virat Kohli reveals the reason and prparations behind that his decision to opening the match in IPL 2021
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X