ஆஸ்திரேலியாவின் தவறா... ஐபிஎல் அணிகளின் தவறா? ஏலம் எடுக்கப்படாத ஃபின்ச்..விளாசும் மைக்கேல் கிளார்க்

சென்னை: ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலிய வீரர் ஃபின்ச் ஒரு அணியால் கூட ஏலம் எடுக்கப்படாதது குறித்து முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

14வது ஐபிஎல் தொடருக்கான ஏலம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஆரோன் ஃபின்ச் எந்த அணியாலும் ஏலம் எடுக்கப்படவில்லை.

6 ரன்கள்தான்... பெவிலியனுக்கு திரும்பிய கேப்டன்... அறிமுக போட்டியில் அக்சர் அபாரம்!

இந்நிலையில் ஆரோன் ஃபின்ச் ஏலம் எடுக்கப்படாதது குறித்து முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

 ஏலம்

ஏலம்

கடந்த ஆண்டு பெங்களூரு அணிக்காக விளையாடிய ஃபின்ச், 12 இன்னிங்ஸ்களில் களமிறங்கி 268 ரன்களை எடுத்துள்ளார். இந்தாண்டு ஆர்.சி.பி அணியால் கழட்டி விடப்பட்டார். ஆனால் அவரை ஏலத்திலும் எந்த அணியும் கண்டுக்கொள்ளவில்லை.

கௌரவம்

கௌரவம்

கடந்த ஆண்டு பிக்பேஷ் தொடரிலும் ஃபின்ச் பெரிய அளவில் சோபிக்க வில்லை.. 13 போட்டிகளில் ஆடிய அவர் 179 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்நிலையில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்துக்கு இடையேயான டி20 போட்டிக்கு ஃபின்ச் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கிளார்க்

கிளார்க்

இது குறித்து பேசியுள்ள கிளார், ஃபின்ச்-ஐ ஏலம் எடுக்காமல் போன ஐபிஎல் அணிகளின் முடிவு தவறா? அல்லது ஆஸ்திரேலிய டி20 அணி கேப்டனாக நியமித்த தேர்வர்கள் தவறான முடிவு எடுத்துள்ளனரா? எனக்கு ஒன்றும் புரியவில்லை.

சிறந்த வீரர்

சிறந்த வீரர்

ஒரு நாட்டின் கிரிக்கெட் அணி கேப்டன், ஐபிஎல்-ல் ஆட தகுதியில்லாதவர் என்று கூறாதீர்கள். இவ்வளவு பெரிய தொடரில் இத்தனை அணிகள் இருந்தும் அவர் கண்டுக்கொள்ளப்படாமல் போயிருந்துள்ளார். இதனை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. என கிளார்க் தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Michael Clarke questions Aaron Finch Doesn't picked at IPL 2021 Auction
Story first published: Tuesday, February 23, 2021, 12:36 [IST]
Other articles published on Feb 23, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X