For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி மீதே சந்தேகமே… வேண்டாம் ப்ளீஸ்.. கரெக்டா அந்த நேரத்தில் விளையாடுவார்

Recommended Video

World Cup 2019 - கட்டை விரலில் காயம்... அடுத்த போட்டியில் தோனி விளையாடுவாரா ?

லண்டன்: தோனி சிறந்த வீரர் என்பதால் அவரது திறமையின் மீது எந்த தருணத்திலும் சந்தேகம் கொள்ளக்கூடாது என்று ஆஸி. அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியிருக்கிறார்.

உலக கோப்பை தொடரில் அபாரமாக ஆடிய இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டது. ரோகித், கோலி மற்றும் பும்ரா ஆகிய மூவரையும் மலை போல நம்பியிக்கும் இந்திய அணிக்கு இன்னும் சிக்கல் கொடுத்து வருவது 4ம் இடம்.

நடுவரிசையில் தோனி மோசமாக ஆடுவதுபோல் இருந்தாலும் அவர் மீது, ரசிகர்களும், அணி நிர்வாகமும் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். ஆனால் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோனி, கேதர் ஜாதவ் ஜோடி பேட்டிங் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. ஒரு கட்டத்தில் சச்சின் டெண்டுல்கரே அதை கடுமையாக விமர்சித்தார்.

தோனியின் மந்தம்

தோனியின் மந்தம்

அதன்பின்னர் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் தோனியின் ஆட்டம் மந்த ரகம் தான். 338 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி, 45 ஓவரில் 267 ரன்கள் அடித்திருந்தது. கடைசி 5 ஓவர்களில் தோனியும், கேதரும் இணைந்து எடுத்த ரன்கள் வெறும் 39.

கடும் நெருக்கடி

கடும் நெருக்கடி

இங்கிலாந்து பவுலர்கள் ஸ்லோ பாலாக வீசி, தோனிக்கும், கேதருக்கும் கடும் நெருக்கடி கொடுத்தனர். ஆடுகளமும் மந்தமாகிவிட்டாலும், பெரிய ஷாட்டுக்கு தோனியும் கேதரும் முயற்சிக்கவே இல்லை. அதுவும் பெரும் விமர்சனத்தை முன் வைத்தது.

கிளார்க் ஆதரவு

கிளார்க் ஆதரவு

இந்நிலையில், தோனியின் ஆட்டம் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கருத்து கூறியுள்ளார். அவர் தோனிக்கு ஆதரவாக உள்ளார். அவர் கூறியிருப்பதாவது: தோனியை மக்கள் சந்தேகப்படக்கூடாது. அவர் ஒரு சிறந்த வீரர்.

தோனி மீண்டெழுவார்

தோனி மீண்டெழுவார்

இந்திய அணிக்கு தோனி மிக மிக அவசியம். எனவே அவர் அணிக்கு தேவைப்படும் வரை அவரை பாதுகாத்து வைக்க வேண்டும். அரையிறுதியிலோ, இறுதி போட்டியிலோ முக்கியமான நேரத்தில் தோனி மீண்டெழுவார் என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, July 5, 2019, 20:58 [IST]
Other articles published on Jul 5, 2019
English summary
Michael clarke supports dhoni and his batting.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X