For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சேவாக் சொன்னதில் தப்பே இல்ல.. தோனியை 3 போட்டிகளில் உட்கார வையுங்க.. பொங்கும் முன்னாள் கேப்டன்

லண்டன்:தோனியை ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்காமல் இருக்கும் வகையில் தடை செய்ய வேண்டும் என்று சேவாக் கூறியது சரிதான் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.

12வது ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டம் சில நாட்களுக்கு ஜெய்பூரில் நடந்தது. அந்த போட்டியில் ஆட்டத்தில் ராஸ்தான் ராயல்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தியது.

போட்டியின் கடைசி ஓவர் இன்று வரை பேசுபொருளாகி விட்டது. கடைசி ஓவரில் ஸ்டோக்ஸ் வீசிய 4வது பந்தை சான்ட்னர் எதிர்கொண்டார். பந்து பேட்ஸ்மேனின் இடுப்புக்கு மேல் சென்றது என்று ஸ்ரெய்ட் அம்பயர் நோ பால் என்றார்.

தோனிக்கு அபராதம்

தோனிக்கு அபராதம்

ஆனால், லெக் அம்பயரோ நோ பால் இல்லை என்றார். அதனால் ஆவேசம் அடைந்த தோனி மைதானத்துக்குள் நுழைந்து நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து தோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

எதிர்ப்பு குரல்கள்

எதிர்ப்பு குரல்கள்

இந்த விவகாரத்தில் தோனிக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் குரல்கள் எழுந்தன. முன்னாள் அம்பயர் ஹரிஹரனும் தோனியின் செயல்பாட்டை கண்டித்தார். அவருக்கான தண்டனை போதாது என்றும் கூறியிருந்தார்.

வாகன் வரவேற்பு

அபராதம் போதாது... என்று குரல்கள் எழுந்தன. முன்னாள் வீரர் சேவாக் 2 அல்லது 3 போட்டிகளுக்கு தோனியை தடைசெய்ய வேண்டுமென்று என்றார். இதே கருத்தை இங்கிலாந்து முனனாள் வீரர் மைக்கேல் வாகனும் கூறி உள்ளார். சேவாக்கின் கருத்தை அவர் வரவேற்றுள்ளார்.

டுவிட்டரில் ஆதரவு

டுவிட்டரில் ஆதரவு

அவர் டுவிட்டரில் கூறியதாவது: தோனியை 2 போட்டிகளுக்கு தடை செய்ய வேண்டும் என்று சேவாக் கூறி இருக்கிறார். தோனி செய்த காரியம் ஏற்க முடியாது. அதனை மற்ற வீரர்களுக்கும் உணர்த்த வேண்டும். அதற்காக ஐபிஎல் தொடரில் தோனிக்கு 2 போட்டிகள் தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Story first published: Sunday, April 14, 2019, 22:51 [IST]
Other articles published on Apr 14, 2019
English summary
Michael Vaughan Agrees with Sehwag, Dhoni Deserved Two Matches Suspension.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X