விராட் கோலி குறித்த வாகனின் கருத்து.. பொங்கி எழுந்த ரசிகர்கள்.. இணையத்தில் வெடித்த சர்ச்சை!

விராட் கோலி - கேன் வில்லியம்சன் ஆகியோரை ஒப்பிட்டு முன்னாள் வீரர் மைகேல் வாகன் கூறியுள்ள கருத்து கோலியின் ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் 18ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

தொடர்ந்து குறி வைக்கப்படும் 'பாண்ட்யா'.. பின்னணியில் யார்? - ஏன் இந்த அவசரம்?

இதற்காக நியூசிலாந்து பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்தபோது மைக்கேல் வாகன் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

போட்டி

போட்டி

உலகின் தலைசிறந்த வீரர்களாக விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸிமித், ஜோ ரூட் ஆகியோர் திகழ்கின்றனர். இவர்களில் யார் பெஸ்ட் என்ற போட்டி அவ்வபோது இணையத்தில் உலா வரும். அந்தவகையில் தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா - நியூசிலாந்து மோதவுள்ளதால், கோலி - வில்லியம்சன் பேட்டிங் குறித்த சண்டைகள் நடந்து வருகிறது.

இந்தியர்களின் ஆதரவு

இந்தியர்களின் ஆதரவு

இதுகுறித்து பேசிய மைக்கேல் வாகன், கேன் வில்லியம்சன் இந்தியராக இருந்திருந்தால் அவர்தான் உலகின் தலைசிறந்த வீரராக இருப்பார். ஆனால் தற்போது அவர் இல்லாததற்கு காரணம் விராட் கோலியை சமூக வலைதளங்களில் இந்தியர்கள் கொண்டாடுவதால் தான். விராட்டுக்கு சமூக வலைதளங்களில் நிறைய லைக், அதிக ஃபாலோவர்கள் உள்ளதால் அவர் தான் சிறந்தவர் என்பது போல் உள்ளது.

வில்லியம்சனும் பெஸ்ட் தான்

வில்லியம்சனும் பெஸ்ட் தான்

கேன் வில்லியம்சன் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் விராட் கோலிக்கு சமமானவர்தான். அவர் விளையாடும் விதம், அமைதியான குணம் ஆகியவையால் அவர் தான் சிறந்த வீரர் என நினைக்கிறேன். விராட் கோலியை போன்று அவருக்கு 100 மில்லியன் ஃபாலோவர்கள் இல்லை, பல நூறு கோடிகளை சம்பாதிக்கவில்லை என்பதால் அவர் பெரியளவில் போற்றப்படவில்லை என்பது போல வாகன் கூறியுள்ளார்.

கோபத்தில் கோலி ரசிகர்கள்

கோபத்தில் கோலி ரசிகர்கள்

சமூக வலைதளங்களை வைத்து சிறந்த வீரராக கூறப்படுகிறார் என்ற வாகனின் கருத்து விராட் கோலியின் ரசிகர்களை ஆத்திரமடைய செய்துள்ளது. இதுமட்டுமல்லாமல் வரவிருக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் கோலியை விட வில்லியம்சனே அதிக ரன்கள் அடிப்பார் எனவும் வாகன் தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Michael Vaughan Compares Kane Williamson with Virat Kohli, using there Social media followers Count
Story first published: Saturday, May 15, 2021, 12:30 [IST]
Other articles published on May 15, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X