For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இது ஒரு அவமானமான செயல்... ஏமாந்து போன ஜடேஜா..பிசிசிஐ முடிவுக்கு இங்கிலாந்து லெஜெண்ட் அதிருப்தி

மும்பை: ஆல்ரவுண்டர் ஜடேஜா விஷயத்தில் பிசிசிஐ எடுத்துள்ள முடிவுக்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக பங்கேற்கும் வீரர்களின் ஒப்பந்தம் மற்றும் ஊதிய விவரங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இனி ப்ளேயிங் 11-ல் இருப்பது சந்தேகம்..தோனியையே கடுப்பேற்றிய இளம் வீரர்.. அதிரடி முடிவெடுக்க வாய்ப்பு இனி ப்ளேயிங் 11-ல் இருப்பது சந்தேகம்..தோனியையே கடுப்பேற்றிய இளம் வீரர்.. அதிரடி முடிவெடுக்க வாய்ப்பு

இதில் ஜடேஜாவுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள பிரிவு ரசிகர்களுக்கும், முன்னாள் வீரர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஊதிய அறிவிப்பு

ஊதிய அறிவிப்பு

அக்டோபர் 2020 முதல் செப்டம்பர் 2021 வரையிலான நடப்பு ஆண்டிற்கான ஒப்பந்தப் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில், ஏ+ பிரிவில் இடம்பெறும் வீரருக்கு ரூ.7 கோடியும், ஏ பிரிவிற்கு ரூ.5 கோடியும், பி மற்றும் சி பிரிவு வீரர்களுக்கு தலா ரூ.3 மற்றும் ரூ.4 கோடியும் ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏமாற்றம்

ஏமாற்றம்

அந்த வகையில் இந்தாண்டு இப்பட்டியலில் ஏ+ பிரிவில் விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ஜஸ்பரீத் பும்ரா மட்டுமே இடம்பெற்றுள்ளனர். ரவீந்திர ஜடேஜாவின் பெயர் இடம்பெறவில்லை. ஏ+ பிரிவில் தேர்வாகும் வீரர்கள் டெஸ்ட், ஒருநாள், டி20 போன்ற மூன்று பிரிவுகளிலும் தொடர்ந்து இடம்பெறவேண்டும் என்பதுதான் விதியாகும். ஜடேஜா கடந்த ஆண்டில் மூன்றுவகை கிரிக்கெட்டிலும் தொடர்ந்து இடம்பெற்று வந்தார். இங்கிலாந்து தொடரில் மட்டும் காயம் காரணமாக வெளியேறினார்.

வாகன் எதிர்ப்பு

வாகன் எதிர்ப்பு

இந்நிலையில் இதுகுறித்து ட்வீட் செய்துள்ள இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன், ஜடேஜாவுக்கு ஏ+ பிரிவில் இடம் வழங்காதது அவமானம. அவர் விராட் கோலியுடன் ஏ+ பிரிவில்தான் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இதே போல இதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியுன் முன்னாள் தேர்வாளர் எம்.எஸ்.கே பிரசாத், ஜடேஜா ஏ+ பிரிவுக்கு தகுதியானவர். அவரின் பெர்ய அந்த பிரிவில் இடம் பெறாமல் இருக்க ஒரு காரணமும் எனக்கு தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.

பெஸ்ட் ஆல்ரவுண்டர்

பெஸ்ட் ஆல்ரவுண்டர்

சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளார். அதேபோல, டெஸ்ட் போட்டிகளுக்கான ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் 3ம் இடத்தை பிடித்துள்ளார். ஆனால் அவர் ஏ+ பிரிவில் சேர்க்கப்படாதது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Saturday, April 17, 2021, 17:49 [IST]
Other articles published on Apr 17, 2021
English summary
Michael Vaughan Reacts for Jadeja not included in A+ Category on BCCI's central contract
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X