For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இவ்வளவு ஏளனமா? நியூசிலாந்தின் வெற்றி.. வாகன் போட்ட ஒற்றை ட்வீட்.. கோபத்தின் உச்சியில் ரசிகர்கள்!

சவுத்தாம்டன்: டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்ற நிலையில் இந்திய ரசிகர்களை மைக்கேல் வாகன் சீண்டியுள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகளிடையே விறுவிறுப்பாக நடைபெற்று வந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நிறைவடைந்தது.

தோனி எச்சரித்த போதும் கேட்கல.. இப்போதும் கேட்கல - கோலி மீண்டும் செய்யும் தோனி எச்சரித்த போதும் கேட்கல.. இப்போதும் கேட்கல - கோலி மீண்டும் செய்யும்

இதில் இந்திய அணி நிர்ணயித்த 139 ரன்கள் என்ற இலக்கை நியூசிலாந்து அணி அசால்ட்டாக அடித்து சாம்பியன் பட்டம் வென்றது.

நியூஸி, வீரர்களின் அனுபவம்

நியூஸி, வீரர்களின் அனுபவம்

இந்த போட்டிக்கு முன்னர் எடுக்கப்பட்ட கணிப்பில் நியூசிலாந்து அணிக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும் என முன்னாள் வீரர்கள் பலர் கூறி வந்தனர். இதற்கு காரணம் இங்கிலாந்து களமானது நியூசிலாந்தில் இருப்பதை போன்றே இருக்கும். எனவே அந்த பிட்ச்-ல் நியூசிலாந்தின் பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் அதிக அனுபவம் வாய்ந்தவர்கள். இதுமட்டுமல்லாமல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து மண்ணில் அந்நாட்டு அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது.

வாகனின் கணிப்பு

வாகனின் கணிப்பு

அனைவரும் வெற்றி வாய்ப்பு அதிகம் எனக்கூறிய நிலையில், இங்கிலாந்தின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் மட்டும், நியூசிலாந்து தான் வெற்றி பெறும், கேன் வில்லியம்சன் நட்சத்திர வீரராக திகழ்வார் என அடித்துக்கூறினார். மேலும் இந்திய அணி மோசமாக தோல்வி அடையும் எனக்கூறியிருந்தார். இதுமட்டுமல்லாமல் ஆட்டத்தில் மழைக்குறுகிட்ட போது, நியூசிலாந்து அணியிடம் இருந்து இந்திய அணியை மழை தான் காப்பாற்றி வருகிறது என விமர்சித்திருந்தார்.

பல்வேறு விமர்சனங்கள்

பல்வேறு விமர்சனங்கள்

வாகனின் இந்த கருத்துகளுக்கு இணையத்தில் அவரை வச்சு செய்தனர் இந்திய ரசிகர்கள். அவரின் ட்விட்டர் பதிவுகளுக்கு மிக மோசமான விமர்சனங்களை அடுக்கினர். இந்நிலையில் அவர் சொன்னபடி நியூசிலாந்து அணியே வெற்றி பெற்றதால், இந்தியர்களை ஏளனமாக பேசியுள்ளார்.

மீண்டும் சீண்டல்

மீண்டும் சீண்டல்

இதுகுறித்து ட்வீட் போட்டுள்ள அவர், நான் கணித்தது போன்றே நியூசிலாந்து வெற்றி பெற்றுவிட்டது. இன்னும் சில மணி நேரங்களில் பல்லாயிரக்கணக்கான இந்திய ரசிகர்களிடம் இருந்து நான் மன்னிப்பை எதிர்பார்க்கிறேன் எனக்கூறியுள்ளார். அவரின் இந்த ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் இன்னும் கடுப்பாகி, அந்த கோபத்தை கோலி மற்றும் புஜாராவின் மீது காட்டி வருகின்றனர்.

Story first published: Thursday, June 24, 2021, 16:31 [IST]
Other articles published on Jun 24, 2021
English summary
Michael Vaughan posted a cheeky Tweet to India fans after New Zealand win WTC final, his Prdiction was correct
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X