புது போர்.. கிளப்பிவிட்ட வாகன்.... கோலி - வில்லியம்சன் இடையே சூடுபிடிக்கும் போட்டி.... யார் பெஸ்ட்?

இங்கிலாந்து: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விராட் கோலியை விட கேன் வில்லியம்சன் அதிக ரன்களை விளாசுவார் என முன்னாள் வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் 18ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

ஐபிஎல்லுக்கு முன் தடுப்பூசி.. அஞ்சிய இந்திய வீரர்கள் - வெளிச்சத்துக்கு வந்த 'பகீர்' ரிப்போர்ட்

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளை வீழ்த்தி நம்பிக்கையுடன் உள்ள விராட் கோலி தலைமையிலான நியூசிலாந்தையும் வெல்ல முனைப்பு காட்டி வருகிறது.

கடும் போட்டி

கடும் போட்டி

இந்த போட்டி நடைபெறும் இங்கிலாந்து பிட்ச்சானது வேகப்பந்துவீச்சாளர்களுக்கும், பேட்ஸ்மேன்களுக்கும் சாதகமான ஒன்றாக இருக்கும். அந்தவகையில் இரு அணிகளிலும் கீ ப்ளேயர்களாக பார்க்கப்படும் விராட் கோலி - கேன் வில்லியம்சன் ஆகியோர் எப்படி உதவப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

யார் பெஸ்ட்

யார் பெஸ்ட்

கடந்த 2 ஆண்டுகளில் இங்கிலாந்து மண்ணில் விராட் கோலி 10 போட்டிகளில் விளையாடி 727 ரன்களை எடுத்துள்ளார். அவரின் சராசரி 36.35 ஆகும். மேலும் இதில் 2 சதங்கள் அடங்கும். அதே வேளையில் வில்லியம்சன் இங்கிலாந்தில் 4 போட்டிகளில் விளையாடி 247 ரன்களை விளாசி 30.87 சராசரியை வைத்துள்ளார். இதில் ஒரு சதமும் அடங்கும். இதனை வைத்து பார்க்கும் போது இருவரின் ஆட்டத்தில் பெரிய அளவில் வித்தியாசம் தெரியவில்லை. ஆனால் வில்லியம்சன் தான் இந்த முறை சிறப்பாக ஆடுவார் என மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

வாகன் கருத்து

வாகன் கருத்து

இதுகுறித்து பேசியுள்ள வாகன், கேன் வில்லியம்சனின் ஆட்டம் மற்றும் பிட்ச்-க்கு ஏற்றவாறு அவரின் நிலையான செயல்பாடுகளை வைத்து பார்க்கும் போது அவர் நிறைய ரன்களை குவிப்பார் என நினைக்கிறேன். இதனால் விராட் கோலியை விட வில்லியம்சன் இந்த முறை சிறப்பாக ஆடி அதிக ரன்களை குவிப்பார்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

சமீப காலமாக விராட் கோலியின் ஆட்டம் குறித்து பல முன்னாள் வீரர்கள் புகழ்ந்து வருகின்றனர். இங்கிலாந்துக்கு கடந்த முறை சென்றபோது விராட் கோலி சிறப்பாக ஆடினார் என்பது உண்மை தான், ஆனால் அதே அளவிற்கு திணறவும் செய்தார் என தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Michael Vaughan says Williamson may get more runs than Kohli in this Summer
Story first published: Saturday, May 15, 2021, 13:50 [IST]
Other articles published on May 15, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X