For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்ன இது முட்டாள்தனம்.. கிரிக்கெட்டில் வரப் போகும் புதிய மாற்றம்.. பொங்கி எழுந்த முன்னாள் கேப்டன்!

லண்டன் : 18 வயதுக்கு கீழே உள்ள வீரர்கள் ஆடும் கிரிக்கெட் போட்டிகளில் பவுன்சரை தடை செய்ய வேண்டும் என்ற விவாதம் நடைபெற்று வருகிறது.

விரைவில் அது அமலுக்கு வரக் கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதை கடுமையாக எதிர்த்துள்ளார் முன்னாள் இங்கிலாந்து அணி கேப்டன் மைக்கேல் வாகன்.

இளம் வீரர்களுக்கு அதை தடை செய்தால், பெரியவர்கள் ஆடும் போட்டிகளிலும் அதை தடை செய்ய வேண்டும் என கூறி உள்ளார்.

பவுன்சர் தாக்குதல்

பவுன்சர் தாக்குதல்

டெஸ்ட் போட்டிகளில் பவுன்சர் தாக்குதல் பந்துவீச்சின் முக்கிய அம்சம் ஆகும். பவுன்சர் பந்துகளை ஆட முடியாமல், தவிர்க்கவும் முடியாமல் வீரர்கள் தங்கள் விக்கெட்களை பறிகொடுத்து விடுவார்கள். அது எதிரணி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் அதே சமயம், அபாயமானதும் கூட.

தடை யோசனை

தடை யோசனை

சில வீரர்கள் பவுன்சர் பந்துகளால் கடுமையாக காயமடைந்து உள்ளனர். ஓரீரு வீரர்கள் இறந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது. இந்த நிலையில், மூளை அழற்சி நிபுணர் மைக்கேல் டர்னர் இளம் வீரர்களுக்கு பவுன்சர் பந்தை தடை செய்வதன் மூலம் இளம் வயதிலேயே அவர்கள் தலையில் ஏற்படும் பாதிப்பை குறைக்க முடியும் என யோசனை கூறி உள்ளார்.

மைக்கேல் வாகன் எதிர்ப்பு

மைக்கேல் வாகன் எதிர்ப்பு

இதை கிரிக்கெட்டின் விதிகளை உருவாகும் மேரில்போன் கிரிக்கெட் கிளப் இதை பரிசீலித்து வரும் நிலையில் மைக்கேல் வாகன் தன் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். "இது முட்டாள்தனமான யோசனை. நாம் வாழ்ந்து வரும் உலகில் ஏதாவது ஒரு விஷயம் அபாயகரமானதாக இருந்தால் அது மிக ஆபத்தானதாக கருதப்படுகிறது." என்றார்.

ஏன் தடைசெய்யக் கூடாது?

ஏன் தடைசெய்யக் கூடாது?

மேலும் அவர் கூறுகையில், இளம் வீரர்கள் அதிகம் எகிறும் வகையில் பவுன்சர் வீசும் அளவுக்கு ஆற்றல் பெற்று இருக்க மாட்டார்கள். மேலும், இளம் வயதில் பவுன்சர் பந்துவீச்சை சந்திக்காமல் பெரியவர்கள் கிரிக்கெட்டில் அவர்கள் அதை சந்திக்கும் போது அது தான் ஆபத்தாக இருக்கும். இளம் வீரர்களுக்கு அதை தடை செய்தால் பெரியவர்களுக்கும் அதை தடை செய்ய வேண்டும் என்றார் மைக்கேல் வாகன்.

Story first published: Thursday, January 28, 2021, 17:52 [IST]
Other articles published on Jan 28, 2021
English summary
Michael Vaughan slams banning bouncers for young cricketers
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X