For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவுட் ஆனதால் தலைக்கு ஏறிய கோபம்.. தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட பிரபல ஆஸி. வீரர்.. கோச் திட்டு!

சிட்னி : பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்செல் மார்ஷ் ஆஸ்திரேலிய அணியில் நிரந்தர இடத்தை பிடிக்க தயாரான நிலையில், அந்த வாய்ப்பை தானே கெடுத்துக் கொண்டுள்ளார்.

உள்ளூர் போட்டி ஒன்றில் அரைசதம் அடித்த பின் அவுட் ஆனார் மிட்செல் மார்ஷ். அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் வந்த கோபத்தில், தன் கையை தானே மோசமாக காயப்படுத்திக் கொண்டுள்ளார்.

இந்த சம்பவத்தை அடுத்து ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், மிட்செல் மார்ஷிடம் "அடிப்படையிலேயே நீ ஒரு முட்டாள்" என கூறி இருக்கிறார்.

மிட்செல் மார்ஷ் வாய்ப்பு

மிட்செல் மார்ஷ் வாய்ப்பு

மார்ஷ் தன் கையை காயப்படுத்திக் கொள்ளும் முன் ஆஸ்திரேலிய அணியில் வருவதும், போவதுமாக இருந்த மிட்செல் மார்ஷ் இனி நிரந்தர வீரராக இடம் பெறுவார் என்ற பேச்சு அடிபட்டு வந்தது.

பாகிஸ்தான் டெஸ்ட் தொடர்

பாகிஸ்தான் டெஸ்ட் தொடர்

அடுத்து வரும் நவம்பர் மாதம் துவங்க இருக்கும் பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் மிட்செல் மார்ஷ் இடம் பெற உள்ளார் என தகவல்கள் வலம் வந்தன. அவரும் உள்ளூர் போட்டிகளில் தன்னை நிரூபித்து வந்தார்.

ஆஷஸ் அசத்தல்

ஆஷஸ் அசத்தல்

கடந்த மாதம் முடிந்த ஆஷஸ் தொடரின் கடைசிப் போட்டியில் அணியில் வாய்ப்பு பெற்றார் மிட்செல் மார்ஷ். ஆல் - ரவுண்டரான அவர் பந்துவீச்சில் மட்டும் சிறப்பாக செயல்பட்டார்.

உள்ளூர் அணி கேப்டன்

உள்ளூர் அணி கேப்டன்

வெஸ்டெர்ன் ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக இருக்கும் அவர் ஷெப்பீல்டு ஷீல்ட் எனும் ஆஸ்திரேலிய முதல் தர கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வந்தார். அதில் சிறப்பாக செயல்பட்டு ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்று விட வேண்டும் என்ற முனைப்பில் ஆடி வந்தார்.

அந்த போட்டி

அந்த போட்டி

டாஸ்மானியா - வெஸ்டெர்ன் ஆஸ்திரேலியா இடையே நடந்த போட்டி ஒன்றில் தான் அந்த மோசமான சம்பவம் நடந்தது. அந்தப் போட்டியில் பந்துவீச்சில் ஓரளவு சிறப்பாக செயல்பட்டார் மார்ஷ்.

அவுட் ஆனதால் கோபம்

அவுட் ஆனதால் கோபம்

இரண்டாம் இன்னிங்க்ஸ் பேட்டிங்கின் போது 53 ரன்கள் அடித்த அவர் பவுலரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பெரிய அளவில் ரன் குவிக்க வேண்டும் என கவனமாக ஆடி வந்த அவர், ஆட்டமிழந்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல் கோபம் கொண்டார்.

கையில் பலத்த காயம்

கையில் பலத்த காயம்

ஆட்டமிழந்த பின் நேராக உடை மாற்றும் அறைக்கு சென்ற அவர், அங்கே சுவற்றின் மீது தன் வலது கையால் ஓங்கி குத்தி இருக்கிறார். அதல் அவரது கை பலத்த காயம் அடைந்துள்ளது. எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது. அதனால், மிட்செல் மார்ஷ் அடுத்த நான்கு முதல் ஆறு வாரத்திற்கு கிரிக்கெட் ஆட முடியாது என மருத்துவர்கள் கூறி உள்ளனர்.

இது ஒரு பாடம்

இது ஒரு பாடம்

இந்த காயத்தால் தற்போது அவர் பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் வாய்ப்பை இழந்துள்ளார். இந்த நிலையில் பேசிய அவர், "இது எனக்கு நல்ல பாடம். மற்றவர்களுக்கும் கூட இது நல்ல பாடம். சில சமயம் நாம் வீழ்த்தப்படுவோம். ஆட்டமிழப்போம். ஆனால், சுவற்றை குத்தக் கூடாது" என புலம்பினார்.

நம்பிக்கை வைத்த பயிற்சியாளர்

நம்பிக்கை வைத்த பயிற்சியாளர்

ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் மிட்செல் மார்ஷ் மீது அதிக நம்பிக்கை வைத்து இருந்தார். தொடர்ந்து அவருக்கு ஆலோசனைகள் கூறி வருகிறார். அவர், மார்ஷ் செய்த காரியத்தால் ஏமாற்றம் அடைந்து இருக்கிறார்.

உரிமையுடன் திட்டு

உரிமையுடன் திட்டு

மார்ஷ்-இடம் பேசிய அவர், "நீ அடிப்படையிலேயே ஒரு முட்டாள்" என உரிமையுடன் திட்டி தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். மிட்செல் மார்ஷ் பிரபல முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஜெப் மார்ஷ்ஷின் மகன் ஆவார். இவரது சகோதரர் ஷான் மார்ஷ்ஷும் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்று ஆடி வருகிறார்.

Story first published: Wednesday, October 16, 2019, 14:42 [IST]
Other articles published on Oct 16, 2019
English summary
Mitchell Marsh injured his hand himself after got out. Australian National team Coach Justin Langer told he is an Idiot, basically.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X