For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“தோனியோட திறமை என்கிட்டையும் இருக்கு”.. இந்தியாவுக்கு எதிரான திட்டம்.. மிட்செல் சாண்ட்னர் சவால்!

ராஞ்சி: இந்திய அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை எதிர்கொள்வதற்கு தோனியிடம் உள்ளதை போலவே கேப்டன்சி திறமை தனக்கு உள்ளதாக நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் கூறியுள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் வெற்றிகரமாக நடந்து முடிந்த சூழலில் அடுத்ததாக 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் மோதவுள்ளன.

இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி இன்று ஜார்காண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.

கோலிவுட்டில் கால்பதித்தார் தோனி.. முதல் தயாரிப்பின் அறிவிப்பு வெளியானது.. நடிகர்கள் யார் தெரியுமா?? கோலிவுட்டில் கால்பதித்தார் தோனி.. முதல் தயாரிப்பின் அறிவிப்பு வெளியானது.. நடிகர்கள் யார் தெரியுமா??

டி20 தொடர்

டி20 தொடர்

நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன், டிம் சௌத்தி, ட்ரெண்ட் போல்ட் போன்ற முன்னணி வீரர்கள் இல்லாமல் விளையாடி தான் இந்தியாவுடனான ஒருநாள் கிரிக்கெட்டில் படு தோல்வியை சந்தித்தது. எனவே டி20 தொடரிலாவது அதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காக களமிறங்குகிறது. மிட்செல் சாண்ட்னர் அந்த அணியை வழிநடத்தப்போகிறார்.

சாண்ட்னர் விளக்கம்

சாண்ட்னர் விளக்கம்

இந்நிலையில் தோனியை போலவே செயல்பட போவதாக சாண்ட்னர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், மிகவும் நிதானமாக இருப்பது தான் எனது பழக்கம். சிஎஸ்கேவில் தோனி மற்றும் ஸ்டீஃபன் ப்ளெமிங்கை பார்த்தால் மிகவும் நிதானமாக கையாள்வார்கள். ஆனால் யோசனை வேற லெவலில் இருக்கும். எனக்கும் அதே போன்ற குணம் தான் இருப்பதாக நினைக்கிறேன்.

டி20 தொடருக்கான திட்டம்

டி20 தொடருக்கான திட்டம்

எம்.எஸ்.தோனியுடன் பணியாற்றியிருக்கிறேன். அவரிடம் உள்ள திறமைகள் எனக்கும் உள்ளது. தற்போது தோனியின் சொந்த ஊரான ராஞ்சியிலேயே நான் கேப்டன்சி செய்வதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். நிச்சயமாக தோனி - ப்ளெமிங் காட்டுவது போன்ற செயல்பாடுகளை இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் செயல்படுத்துவேன் என சாண்ட்னர் கூறியுள்ளார்.

ராஞ்சி பிட்ச்

ராஞ்சி பிட்ச்

சென்னை அணியில் தோனியுடன் நிறைய போட்டிகளில் பணியாற்றியுள்ளார் மிட்செல் சாண்ட்னர். ராஞ்சி மைதானத்தின் பிட்ச்சானது சுழற்பந்துவீச்சாளர்களுக்கு தான் சாதகமாக இருக்கும். எனவே மிட்செல் சாண்ட்னர் சென்னையில் விளையாடிய போது செய்த வியூகங்களை இன்று செயல்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளன.

Story first published: Friday, January 27, 2023, 14:48 [IST]
Other articles published on Jan 27, 2023
English summary
Skipper Mitchell santner makes huge statement on captaincy role ahead of India vs new zealand 1st T20
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X