For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி.. ஏன் இப்படி பண்றீங்க? தலையை சொறியும் பவுலர்கள்.. சைலன்ட்டாக காலி செய்யும் தல.. சிஎஸ்கே ரகசியம்

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி எப்படி திட்டம் தீட்டி விக்கெட் வீழ்த்த உதவுவார் என சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறி உள்ளார் அந்த அணியின் வீரர் மிட்செல் சான்ட்னர்.
தோனியின் சில செயல்களை பார்த்து பந்துவீச்சாளர்கள் குழப்பம் அடைவோம். ஆனால், அது பலன் தரும் என கூறி உள்ளார்.
மேலும், நியூசிலாந்து அண்மி கேப்டன் கேன் வில்லியம்சன் - தோனி இடையே உள்ள ஒற்றுமைகளையும் ஒப்பிட்டுக் காட்டி உள்ளார் அவர்.

Recommended Video

Mitchell Santner compares Dhoni with Kane Williamson.

பிடிச்ச கேப்டன்.. பிடிச்ச பேட்டிங் பார்ட்னர்... ஷிகர் தவானின் விருப்பம்பிடிச்ச கேப்டன்.. பிடிச்ச பேட்டிங் பார்ட்னர்... ஷிகர் தவானின் விருப்பம்

சிறந்த கேப்டன்

சிறந்த கேப்டன்

சிறந்த கிரிக்கெட் கேப்டன்கள் வரிசையில் எப்போதும் இடம் பெறுபவர் இந்தியாவின் தோனி. இந்திய அணி, ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் என இரண்டு அணிகளையும் வெற்றிகரமாக வழி நடத்தியவர் தோனி. பல கோப்பைகளையும் பெற காரணமாக இருந்துள்ளார்.

அதிக முறை பிளே ஆஃப்

அதிக முறை பிளே ஆஃப்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை பிளே-ஆஃப் சென்ற அணி ஆகும். அதே போல மூன்று முறை ஐபிஎல் கோப்பை வென்றுள்ளது அந்த அணி. அதனாலேயே சிறந்த ஐபிஎல் கேப்டன்களில் ஒருவராக கருதப்படுகிறார் தோனி.

 தோனியின் திட்டங்கள்

தோனியின் திட்டங்கள்

தோனி விக்கெட் வீழ்த்த களத்தில் அந்த நேரத்தில் திட்டம் தீட்டி அதில் வெற்றி பெறுவார் என பலரும் கூறி இருக்கிறார்கள். எதிரணி பேட்ஸ்மேன் என்ன செய்வார் என்பதை ஊகித்து பீல்டிங் நிறுத்துவதில் தோனி சிறப்பாக செயல்படுவார். இது குறித்து சிஎஸ்கே வீரர் சான்ட்னர் தன் அனுபவத்தை கூறினார்.

சிஎஸ்கே பேட்டி

சிஎஸ்கே பேட்டி

தற்போது லாக்டவுன் காரணமாக 2020 ஐபிஎல் தொடர் நடக்காத நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சமூக வலைதள பக்கத்தில் பல்வேறு வீரர்களை பேட்டி எடுத்து பதிவிட்டு வருகிறது அந்த அணி. சமீபத்தில் மிட்செல் சான்ட்னரை பேட்டி எடுத்தனர்.

சான்ட்னர் என்ன சொன்னார்?

சான்ட்னர் என்ன சொன்னார்?

மிட்செல் சான்ட்னர் கூறுகையில், தோனி உள்ளுணர்வை கொண்டு லேசாக பீல்டிங் மாற்றுவார், பந்துவீச்சை மாற்றுவார் என்றார். மேலும், சில சமயம் என்ன செய்கிறீர்கள்? என தோன்றும். ஆனால், அது பல சமயம் பலன் அளிக்கும் என்றார் சான்ட்னர்.

என்ன செய்வார் தோனி?

என்ன செய்வார் தோனி?

"தோனி தன் முடிவுகளை பெரும்பாலும் உள்ளுணர்வை கொண்டு எடுப்பார். பீல்டிங்கில் லேசாக மாற்றம் செய்வார். பந்துவீச்சிலும் அது போல மாற்றம் செய்வர். குறிப்பாக நான் பந்து வீசும் போது செய்வார். நான் இங்குள்ள பல பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ஆடியதில்லை என்பதால் அப்படி செய்வார்" என்றார் சான்ட்னர்.

 தோனி.. ஏன் இப்படி செய்றீங்க?

தோனி.. ஏன் இப்படி செய்றீங்க?

"இந்த வீரர்களுடன் அதிகமாக ஆட ஆட உங்களுக்கு அந்த எண்ணம் வரும். "தோனி ஏன் இப்படி செய்கிறீர்கள்?" என சில சமயம் நமக்கு தோன்றும். அது பல சமயங்களில் வேலை செய்யும்" என தோனியின் உள்ளுணர்வு எப்படி சந்தேகத்தை உண்டாக்கினாலும், பலனளிக்கும் என்பதை சுட்டிக் காட்டினார்.

வில்லியம்சனுடன் ஒப்பீடு

வில்லியம்சனுடன் ஒப்பீடு

நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கிட்டத்தட்ட தோனி போன்றே களத்தில் அமைதியாக இருக்கக் கூடியவர். தன் திட்டங்களை அமைதியாக செயல்படுத்தி வெற்றி காணக் கூடியவர். நியூசிலாந்து வீரரான மிட்செல் சான்ட்னர், இரண்டு கேப்டன்கள் இடையே ஆன ஒற்றுமைகளை கூறினார்.

இருவரும் அமைதி

இருவரும் அமைதி

"இருவருமே களத்தில் அமைதியாகவும், பதற்றம் இல்லாமலும் இருப்பார்கள். களத்தில் ஒரே மாதிரி தான் நடந்து கொள்வார்கள். கேன் வில்லியம்சன் களத்தில் சூடாக மாட்டார். தன் அமைதியாக திட்டங்களை செயல்படுத்துவார்" என தோனி - கேன் வில்லியம்சன் குறித்து கூறினார் மிட்செல் சான்ட்னர்.

Story first published: Thursday, May 14, 2020, 15:50 [IST]
Other articles published on May 14, 2020
English summary
Mitchell Santner says Dhoni’s decision would be based on instinct. He also compares Dhoni with Kane Williamson.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X