For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எச்சிலைத் தொட்டு பந்தை ஷைனாக்க முடியாட்டி எப்படி.. போரடிக்குமே.. மிட்சல் வருத்தம்

சிட்னி: எச்சிலைத் தொட்டு பந்தை ஷைனாக்கக்கூடாது என்றால் போட்டி ரொம்ப போரடித்து விடும். ஸ்விங் பவுலிங்கையே நாம் மறக்க வேண்டி வரும் என ஆஸ்திரேலிய வேகப் பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் கூறியுள்ளார்.

கொரோனா வந்து உலகையே புரட்டிப் போட்டு விட்டது. வாழ்க்கை முறையில் மிகப் பெரிய மாற்றம் வந்து விட்டது. அதேபோல விளையாட்டுத் துறையிலும் ஏகப்பட்ட மாற்றங்கள். அதில் ஒன்றாக, கிரிக்கெட்டில் பந்தை எச்சில் தொட்டு ஷைன் ஆக்குவதற்கு தடை வந்துள்ளது.

வேகப் பந்து வீச்சாளர்கள் பந்தை எச்சில் தொட்டு ஷைன் ஆக்கி ஸ்விங் பவுலிங் செய்வது காலம் காலமாக நடப்பது. இதற்குத்தான் தற்போது தடை விதித்துள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த ஸ்விங் பவுலிங்தான் பல நேரங்களில் முடிவுகளையே தீர்மானிக்கும். இதற்கு தடை விதித்துள்ளதால் வேகப் பந்து வீச்சாளர்கள் அப்செட் ஆகியுள்ளனர்.

வாசிம் அக்ரம், வாக்கர் யூனிசுக்கு எதிராக கோலி விளையாடி இருக்கணும்...வாசிம் அக்ரம், வாக்கர் யூனிசுக்கு எதிராக கோலி விளையாடி இருக்கணும்...

ஸ்டார்க் கருத்து

ஸ்டார்க் கருத்து

ஆஸ்திரேலிய வேகப் பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இது நிச்சயம் விளையாட்டை போரடிக்க வைத்து விடும். பந்தை எச்சில் தொட்டு ஷைன் செய்யாமல் எப்படி ஸ்விங் செய்ய முடியும். இது நிச்சயம் அனைவரையும் போரடிக்க வைக்கப் போகிறது. பந்தை ஸ்விங் செய்ய எச்சில் தொடாமல் வேறு என்ன வழியில் செய்ய முடியும் என்பதை நாம் யோசிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

ஸ்விங் பவுலிங்

ஸ்விங் பவுலிங்

ஸ்விங் பவுலிங் முக்கியமானது. குறிப்பாக டெஸ்ட் போட்டியில் ஸ்விங் பவுலிங் இல்லாமல் நிச்சயம் ஆட்டத்தை தொடர முடியாது. ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் வீரர்களுக்கும் கூட போரடித்து விடும். மேலும் பேட்ஸ்மேன்களுக்கு எதிரான முக்கிய ஆயுதமாக பவுலர்கள் கருதுவது ஸ்விங் பவுலிங்கைத்தான். அதைப் பறிப்பதை நாங்கள் விரும்பவில்லை. அதை இழக்க நாங்கள் விரும்பவில்லை என்றார்.

கஷ்டமாச்சே

கஷ்டமாச்சே

ஸ்விங் பவுலிங் இல்லாமல் பந்து வீச்சாளர்கள் சோபிக்க முடியாது. அப்படி போனால் இளைஞர்கள் எங்களை ரசிக்க மாட்டார்கள். ஆஸ்திரேலியாவில் கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் பிளாட் விக்கெட்டைப் பயன்படுத்தி வருகிறோம். இதில் பந்து நேராக போனால் நிச்சயம் போரடித்துப் போய் விடும் என்று கூறியுள்ளார் மிட்சல். உண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு மட்டுமல்ல எந்த நாட்டிலும் கூட ஸ்விங் பவுலிங் இல்லாவிட்டால் நிச்சயம் போரடிக்கும்தான்.

கும்ப்ளே பரிந்துரை

கும்ப்ளே பரிந்துரை

அனில் கும்ப்ளே தலைமையிலான ஐசிசி கமிட்டிதான் எச்சில் தொட்டு பந்தை ஷைன் செய்வதற்குத் தடை விதிக்க பரிந்துரைத்துள்ளது. இதற்கு இரு விதமான கருத்துக்கள் எழுந்துள்ளனர். பலர் வரவேற்றுள்ளனர். பலர் எதிர்த்துள்ளனர். அதில்தான் மிட்சல் சேர்ந்துள்ளார். தற்போதைய சூழ்நிலை புரிகிறது. ஆனால் ஸ்விங் பவுலிங்குக்கு ஏதாவது மாற்று வழி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் என்றும் மிட்சல் கோரிக்கை வைத்துள்ளார்.

Story first published: Tuesday, May 26, 2020, 17:12 [IST]
Other articles published on May 26, 2020
English summary
Bowler Mitchell Starc has opposed Saliva Ban
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X