For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஹலோ! கோலி, ரோஹித் சர்மாவா? மிதாலி ராஜ் உங்களை விட அதிக ரன் அடிச்சு இருக்காங்களாமே!!

கயானா: இந்திய மகளிர் அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடந்து வரும் உலக டி20 தொடரில் பங்கேற்று உலகக்கோப்பை வெல்லும் முனைப்புடன் ஆடி வருகிறது.

முதல் போட்டியில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் சதம் அடித்து சாதனை புரிந்தார். இரண்டாம் போட்டியில் முன்னாள் கேப்டன் மற்றும் மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் அரைசதம் அடித்தார்.

அதன் மூலம் கோலி, ரோஹித்தை முந்தி புதிய சாதனை படைத்துள்ளார் மிதாலி ராஜ்.

[கல்யாணத்துக்கு பொண்ணு, மாப்பிள்ளை வேணுமா? இனிமே யோசிக்காம நம்ம தோனி கிட்ட கேளுங்க]

சாதனைகள் படைத்த மிதாலி

சாதனைகள் படைத்த மிதாலி

அந்த அரைசதம் மூலம் சில சாதனைகளை முறியடித்துள்ளார் மிதாலி ராஜ். இந்த ஆண்டில் அதிக அரைசதம் அடித்த சாதனையை நியூசிலாந்து வீராங்கனையுடன் பகிர்ந்து கொண்டார். அதே போட்டியில் இந்திய மகளிர் அணியில் அதிக ரன்கள் குவித்த ஜோடியாக மிதாலி - மந்தனா ஜோடி இடம் முதல் இடம் பிடித்தது. மேலும், இந்த போட்டியில் முக்கியமாக இந்திய ஆண்கள் கிரிக்கெட் சாதனை ஒன்றை முறியடித்து ஆச்சரியப்படுத்தி உள்ளார் மிதாலி ராஜ்.

கோலியை முந்திய ரோஹித் சர்மா

கோலியை முந்திய ரோஹித் சர்மா

டி20 போட்டிகளில் இந்திய அளவில் அதிக ரன்கள் குவித்தவர் ரோஹித் சர்மா என வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின் போது கூறப்பட்டது. கோலி 2102 டி20 ரன்கள் அடித்துள்ளார். அதை முந்திய ரோஹித் தற்போது 2207 ரன்கள் எடுத்துள்ளார்.

முதல் இடத்தில் மிதாலி ராஜ்

முதல் இடத்தில் மிதாலி ராஜ்

இந்திய அளவில் இவர்கள் இருவரையும் மிதாலி ராஜ் இரண்டாவது டி20 போட்டியில் அடித்த அரைசதம் மூலம் முந்தி உள்ளார். மகளிர் கிரிக்கெட்டில் மிதாலி ராஜ் 2232 ரன்கள் அடித்துள்ளார். அவர் 79 இன்னிங்க்ஸ்களில் இந்த ரன்களை எட்டி உள்ளார். மகளிர் கிரிக்கெட்டில் அதிக டி20 ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் மிதாலி ஐந்தாம் இடத்தில் தான் இருக்கிறார். இந்திய அளவில் முதல் இடத்தில் இருக்கிறார்.

ஆண்களை மீறி சாதிக்கும் பெண்கள்

ஆண்களை மீறி சாதிக்கும் பெண்கள்

மகளிர் கிரிக்கெட் ஆடவர் கிரிக்கெட்டுக்கு இணையாக வளர்ந்து வருவதையே இந்த சாதனை உணர்த்துகிறது. பெண்கள் சாதிப்பது ஒன்றும் புதிதில்லை. ஆனால், கிரிக்கெட்டில் ஆண்கள் கிரிக்கெட்டுக்கு இருக்கும் சம்பளம், முக்கியத்துவம், விளம்பரம் பெண்களுக்கு இல்லை. அதை மீறியும் அவர்கள் சாதித்து வருகிறார்கள்.

Story first published: Tuesday, November 13, 2018, 12:52 [IST]
Other articles published on Nov 13, 2018
English summary
Mithali Raj beat Virat Kohli and Rohit Sharma in most runs in T20I
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X