For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தமிழ் என் தாய் மொழி.. உரக்கச் சொன்ன “தமிழச்சி” மிதாலி ராஜ்.. விடாது துரத்தும் கிரிக்கெட் அரசியல்!

ட்விட்டரில் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜை குறி வைத்து ஒரு நபர் சீண்ட, அதற்கு நெத்தி அடி பதில் அளித்து இருக்கிறார் மிதாலி.

Recommended Video

Mithali Raj's Tamil Tweet goes viral

சென்னை : ட்விட்டரில் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜை குறி வைத்து ஒரு நபர் சீண்ட, அதற்கு நெத்தி அடி பதில் அளித்து இருக்கிறார் மிதாலி.
மிதாலிக்கு தமிழ் பேசத் தெரியாது என ஒருவர் சீண்ட, அதற்கு பதில் அளித்துள்ள மிதாலி நான் தமிழர் தான் என அழுத்தமாக கூறி இருக்கிறார்.
ஆனால், இதன் பின்னணி குறித்து ஆராய்ந்தால், இது மகளிர் கிரிக்கெட்டில் இருக்கும் அரசியலின் நீட்சி தான் என தோன்றுகிறது.

ட்விட்டர் புகைப்படம்

ட்விட்டர் புகைப்படம்

மிதாலியை சீண்டியவர், தற்போதைய மகளிர் டி20 அணியின் கேப்டன் மற்றும் துணை கேப்டனான ஹர்மன்ப்ரீத் கௌர், ஸ்மிரிதி மந்தனாவின் புகைப்படத்தை தன் ட்விட்டர் பக்கத்தின் முகப்பில் பெரிதாக வைத்துள்ளார். அதுவே பல விஷயங்களை சொல்கிறது.

தமிழர் மிதாலி ராஜ்

தமிழர் மிதாலி ராஜ்

மிதாலி ராஜ் குடும்பம் ஒரு தமிழ்க் குடும்பம். எனினும், தந்தையின் பணி காரணமாக ராஜஸ்தான் மற்றும் தற்போதைய தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் தான் அவர் பெரும்பாலும் தன் வாழ்க்கையை கழித்துள்ளார்.

பலருக்கும் தெரியாது

பலருக்கும் தெரியாது

மிதாலி ராஜ் தமிழர் என்பது இந்திய அளவில் சிலருக்கு மட்டுமே தெரியும். தமிழ்நாட்டில் பலருக்கும் இது தெரிந்த விஷயம் தான். எனினும், மிதாலி ராஜ் தமிழ் பேசி யாரும் பார்த்ததில்லை. அதை வைத்து தான் அந்த நபர் சீண்டி இருக்கிறார்.

தமிழ் பேச வராது

அந்த குறிப்பிட்ட நபர், மிதாலி ராஜுக்கு தமிழ் பேச வராது. அவர் ஆங்கிலம், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் தான் பேசுவார் என மிதாலி ராஜின் பதிவு ஒன்றின் கீழே பதிவிட்டுள்ளார்.

நெத்தி அடி பதில்

நெத்தி அடி பதில்

அந்த குறிப்பிட்ட நபர் தொடர்ந்து மிதாலி ராஜின் ட்வீட்களுக்கு கடந்த காலத்தில் சீண்டும் விதமாக பதில் அளித்து வந்துள்ளார். தற்போது தாய்மொழி விஷயத்தில் அவர் சீண்டியத்தை அடுத்து இந்த முறை பதிலடி கொடுக்க நினைத்த மிதாலி நெத்தி அடியாய் அடித்தார்.

தமிழ் என் தாய் மொழி

தன் பதிவில், "தமிழ் என் தாய் மொழி.. நான் தமிழ் நன்றாக பேசுவேன்.. தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை. அதற்கும் மேல் நான் இந்தியர். என் இனிய சுகு (சீண்டியவரின் பெயர்), என் ஒவ்வொரு பதிவுக்கும் உங்களின் தொடர்ந்த விமர்சனங்கள், நான் என்ன செய்ய வேண்டும், எதை எப்படி செய்ய வேண்டும் என நீங்கள் தினமும் அளிக்கும் அறிவுரைகள் தான் என்னை ஓட வைக்கிறது" என கூறி இருக்கிறார்.

பலரின் பாராட்டு

பலரின் பாராட்டு

மிதாலி ராஜின் இந்த பதிவு தமிழர்கள் மட்டுமின்றி, இந்திய அளவில் பலரையும் பாராட்ட வைத்துள்ளது. தாய்மொழி குறித்து நெத்தியடி பதில் அளித்தார் மிதாலி என பலரும் புகழ்ந்து வந்தாலும், இது தாய் மொழியை தாண்டிய விஷயம்.

பெரும் குழப்பம்

பெரும் குழப்பம்

கடந்த ஆண்டு மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் பெரும் குழப்பம் வெடித்தது. மிதாலி ராஜை அப்போதைய பயிற்சியாளர் ரமேஷ் பவார் மோசமாக நடத்தியதாகவும், அரையிறுதிப் போட்டியில் ஆட விடாமல் செய்ததாகாவும் குற்றச்சாட்டு எழுந்தது.

அவர்களின் ஆதரவு

அவர்களின் ஆதரவு

மிதாலியை நீக்கும் விஷயத்தில் ரமேஷ் பவாருக்கு, டி20 அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர், துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆதரவு இருந்ததாக அப்போது பேசப்பட்டது. சமீபத்தில் டி20 அணியில் இருந்து மிதாலி ராஜ் ஓய்வு பெற்றார். இந்த விவகாரம் அடங்கினாலும், இன்னும் புகைச்சல் இருக்கத்தான் செய்கிறது.

அரசியலின் நீட்சி

அரசியலின் நீட்சி

மிதாலி ராஜை சீண்டிய நபர் ஹர்மன்ப்ரீத் கௌர் மற்றும் ஸ்மிருதி மந்தனாவின் ரசிகராக இருக்கலாம். அவரது பதிவு அந்த வீராங்கனைகளுக்கு சம்பந்தம் இல்லாதது தான். ஆனால், அவர்களின் ரசிகரைப் போல தன்னை காட்டிக் கொண்டு ஒருவர் செய்திருக்கும் இந்த சீண்டல் மகளிர் கிரிக்கெட்டில் இருக்கும் அரசியலின் நீட்சி என்பதை மறுக்க முடியவில்லை.

Story first published: Thursday, October 17, 2019, 17:56 [IST]
Other articles published on Oct 17, 2019
English summary
It seems Mithali Raj targeted by the after effects of cricket politics. A twitter user targeted her criticized her continuously.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X