For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மொயின் அலி எங்கிட்ட இதைத்தான் சொன்னாரு…! களத்தில் பேசிய ரகசியம்… போட்டுடைத்த கோலி

கொல்கத்தா:அடித்து ஆடப்போகிறேன் என்று பேட் செய்யும் முன்பே என்னிடம் மொயின் அலி கூறினார் என்று பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 35வது போட்டி நேற்றிரவு கொல்கத்தாவில் நடைபெற்றது. போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின.

போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது கொல்கத்தா அணி. அதன்படி முதலில் ஆடிய பெங்களூரு, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக கேப்டன் கோலி 58 பந்துகளில் 100 ரன்களும், மொயின் அலி 28 பந்தில் 66 ரன்களையும் குவித்தனர்.

செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்!! செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்!!

பெங்களூரு வெற்றி

பெங்களூரு வெற்றி

214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்களை மட்டுமே அடித்தது. இதன்மூலம் 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி தோல்வி அடைந்தது. ரசல் 25 பந்துகளில் 65 ரன்களும், ராணா 46 பந்துகளில் 85 ரன்களையும் குவித்தனர்.

கோலி ஆட்ட நாயகன்

கோலி ஆட்ட நாயகன்

பெங்களூரு அணி வெற்றியை தொடர்ந்து, கோலி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய கோலி கூறியதாவது : இந்த போட்டியில் வெற்றி பெற்றது சிறப்பானது. ஏனெனில் டி வில்லியர்ஸ் போன்ற மூத்த வீரர்கள் இல்லாதது பலவீனம்.

175 ரன்கள் வரும்

175 ரன்கள் வரும்

இருப்பினும் டேல் ஸ்டெய்ன் சிறப்பாக பந்துவீசினார். அவரின் அனுபவம் இளம் வீரர்களுக்கும் உதவியது. 175 ரன்கள் வரை தான் குவிக்க முடியும் என்று நினைத்தேன்.

ஆட்டத்தையே மாற்றினார்

ஆட்டத்தையே மாற்றினார்

ஆனால், மொயின் அலி சிறப்பாக விளையாடி ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டார். அவர் களத்திற்கு வரும்போது நான் அடித்து ஆட போகிறேன் என்று என்னிடம் கூறியே அதிரடியாக ஆட ஆரம்பித்தார்.

அழுத்தம் குறைந்தது

அழுத்தம் குறைந்தது

மைதானத்தில் அவர் சிக்சர்களை தொடர்ந்து அடித்தார். அவர் ஆடிய விதத்தால் ரன்கள் வர தொடங்கின. பிறகு என்மீது இருந்த அழுத்தம் குறைந்து நானும் எனது இயல்பான ஆட்டத்திற்கு மாறி ரன்களை குவிக்க ஆரம்பித்தேன்.

ஆட்டத்தால் பிரமிப்பு

ஆட்டத்தால் பிரமிப்பு

அதனால் நான் சிறப்பாக விளையாடி சதமடித்தேன். எனவே இந்த வெற்றிக்கு காரணம் மொயின் அலி மற்றும் ஸ்டெய்ன் இருவரும் தான். மேலும், ரசல் விளையாடிய விதம் பிரமிப்பாக இருந்தது. இதுபோல, அவராலே மட்டுமே விளையாட முடியும் என்றும் கோலி கூறினார்.

Story first published: Saturday, April 20, 2019, 12:18 [IST]
Other articles published on Apr 20, 2019
English summary
Moeen ali changed the game completely says virat kohli.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X