For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தீயாய் வேலை செய்யறாரு... இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பத்தி சிஎஸ்கே கடைக்குட்டி பாராட்டு

மும்பை : ஐபிஎல் 2021 தொடரின் முதல் போட்டியில் கைநழுவிய வெற்றியை அடுத்த இரு போட்டிகளில் கெட்டியாக பிடித்துக் கொண்டுள்ளது சிஎஸ்கே.

நேற்றைய போட்டி கொடுத்த சிறப்பான வெற்றியை அடுத்து ஐபிஎல் 2021 புள்ளிகள் பட்டியலில் சிஎஸ்கே 2வது இடத்தில் உள்ளது.

பிராவோ மீது கொந்தளிக்கும் முன்னாள் வீரர்கள்.. போட்டியின் போது செய்த தவறு.. சிக்கிய ஆதாரம்.. பின்னணி பிராவோ மீது கொந்தளிக்கும் முன்னாள் வீரர்கள்.. போட்டியின் போது செய்த தவறு.. சிக்கிய ஆதாரம்.. பின்னணி

நேற்றைய போட்டியில் மொயீன் அலி, சாம் கர்ரன், ரவீந்திர ஜடேஜா ஆகிய பௌலர்கள் சிங்கங்களாக செயல்பட்டு இந்த வெற்றியை சாத்தியப்படுத்தினர்.

சிஎஸ்கே அடுத்தடுத்த வெற்றி

சிஎஸ்கே அடுத்தடுத்த வெற்றி

ஐபிஎல் 2020 தொடரில் சொதப்பிய சிஎஸ்கே தற்போது புதிய வலிமையுடன் இந்த சீசனை எதிர்கொண்டு வருகிறது. முதல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் விளையாடி தோல்வி அடைந்தது. அந்த தோல்வி கொடுத்த தளர்வை தனது வலிமையாக்கிக் கொண்டு தற்போது அடுத்தடுத்த வெற்றியை கொடுத்துள்ளது சிஎஸ்கே.

பூர்த்தி செய்த சிஎஸ்கே

பூர்த்தி செய்த சிஎஸ்கே

ரசிகர்களும் இதைத்தான் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருகின்றனர். நேற்றைய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அதிகமான சிறப்பான தருணங்களை ரசிகர்களுக்கு தந்தது சிஎஸ்கே. நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே வீரர்களில் பிளசிஸ் மட்டுமே அதிகபட்சமாக 33 ரன்களை அடித்திருந்தார்.

பிராவோ சிறப்பு

பிராவோ சிறப்பு

அடுத்தடுத்து வீரர்கள் சிறப்பான பேட்டிங்கை அளிக்கவில்லை என்றாலும் அணியின் ஸ்கோர் உயர்வுக்கு தங்களால் ஆன பங்களிப்பை செய்துவிட்டு சென்றனர். பிராவோ 8 பந்துகளில் 20 ரன்களை அடித்திருந்தார். எதிரணியின் சேத்தன் சகரியா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

3 விக்கெட்டுகள்

3 விக்கெட்டுகள்

சிஎஸ்கே ஆல்-ரவுண்டர் மொயீன் அலி தன் பங்கிற்கு பேட்டிங், பௌலிங் இரண்டிலும் கலக்கலான ஆட்டத்தை அளித்தார். 20 பந்துகளில் 26 ரன்களை அடித்த அவர் தொடர்ந்து பௌலிங்கிலும் ஜடேஜா மற்றும் கர்ரனுடன் இணைந்து கலக்கினார். அவர் நேற்றைய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 3 ஓவர்களில் 7 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சாம் கர்ரன் 2 விக்கெட்

சாம் கர்ரன் 2 விக்கெட்

ஜடேஜாவும் தன்னுடைய பங்கிற்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சாம் கர்ரன் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் மொயீன் அலி தீயாய் செயல்பட்டதாக சாம் கர்ரன் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் அவர் டாப் ஆர்டரில் விளையாடுவதை மிகவும் என்ஜாய் செய்வதாகவும் கர்ரன் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, April 20, 2021, 19:14 [IST]
Other articles published on Apr 20, 2021
English summary
It's really nice to get two wins now and get some momentum -Sam Curran
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X