For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

குறைந்த போட்டியில் அதிக விக்கெட்டுகள்... சர்வதேச அளவில் 4வது இடம் பிடித்த இந்திய பவுலர்!

By Veera Kumar

மெல்போர்ன்: குறைந்த போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் வரிசையில் இந்தியாவை சேர்ந்த ஒரு வேகப்பந்து வீச்சாளர் இடம்பெற்றுள்ளது பவுலிங் யூனிட்டுக்கு வலுவை கொடுத்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்தளவில், கபில்தேவ், ஜவகல் ஸ்ரீநாத், வெங்கடேச பிரசாத், அகர்கர், ஜாகீர்கான் என, விரல் விட்டு எண்ணக்கூடிய உலகத் தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களைதான், உருவாக்கியுள்ளது. அவர்களில் ஜாகிர்கான் மட்டுமே சமகால வீரர் என்றபோதிலும், தொடர் காயங்களால் இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

ஷமியின் பவுன்சர்

ஷமியின் பவுன்சர்

இந்நிலையில் இந்தியாவில் தற்போது ஒரு வேகப்பந்து வீச்சாளர் விஸ்வரூபம் எடுத்து வருகிறார். அவர்தான், முகமது ஷமி. அதிகபட்சமாக மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகம் வரை பந்து வீசும் திறன் கொண்ட ஷமியின் பலம், அவரது ஸ்விங் பவுலிங்தான். ஜாகீர் கான் யார்க்கர் எப்படி உலக பிரசித்தியோ, அதுபோல ஷமியின் பவுன்சரும் சமீபகாலமாக டாக் ஆப்தி டவுன் ஆக மாறிவருகிறது.

76 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்

76 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்

இதுவரை 42 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள முகமது ஷமி, மொத்தம் 76 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அந்த வகையில், சர்வதேச அளவில், 42வது போட்டியிலேயே 76 விக்கெட்டுகளை வீழ்த்திய வீர்ர்கள் பட்டியலில் ஷமி 4வது இடத்தை பிடித்துள்ளார்.

பாண்ட் முதலிடம்

பாண்ட் முதலிடம்

42வது போட்டியில் 80 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம், நியூசிலாந்தின் முன்னாள் அதிவேக பந்து வீச்சாளர் ஷேன் பாண்ட் முதலிடத்தில் உள்ளார்.

சக்லைன் முஷ்டாக்

சக்லைன் முஷ்டாக்

பாகிஸ்தானின் ஜாம்பவான் ஸ்பின்னராக விளங்கிய, சக்லைன் முஷ்டாக் 79 விக்கெட்டுகளுடன் இந்த பட்டியலில் 2வது இடம் வகிக்கிறார்.

அஜந்தா மெண்டிஸ்

அஜந்தா மெண்டிஸ்

இலங்கை ஸ்பின்னர் அஜந்தா மெண்டிஸ் 77 விக்கெட்டுகளுடன் 3வது இடத்தில் உள்ளார்.

பிரெட் லீ, அகர்கர்

பிரெட் லீ, அகர்கர்

ஆஸ்திரேலியாவின் அதிவேக பந்து வீச்சாளர் பிரெட் லீ மற்றும் இந்தியாவின் அஜித் அகர்கர் ஆகியோர் 42வது போட்டியின்போது தலா 75 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

Story first published: Monday, February 23, 2015, 15:36 [IST]
Other articles published on Feb 23, 2015
English summary
India's Mohad Shami is in the list of most ODI wicket taker after playing 42 games.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X