For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்.. உள்ளே நுழைய புதிய ரூட்.. வரலாற்றில் 2வது வீரர் ஆவார் - முழு விவரம்

இங்கிலாந்து: பாகிஸ்தானை சேர்ந்த வீரர் ஒருவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Recommended Video

IPL தொடரில் Pakistan வீரர் Mohammad Amir உள்ளே நுழைய புதிய ரூட் | Oneindia Tamil

பாகிஸ்தான் அணியில் இருந்து ஓய்வு பெற்ற முகமது அமீர், அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் மீது தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

ஐபிஎல்-ல் நடந்த தவறு இனி நடக்காது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான பயோ பபுள்.. பிசிசிஐ புதிய ப்ளான்ஐபிஎல்-ல் நடந்த தவறு இனி நடக்காது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான பயோ பபுள்.. பிசிசிஐ புதிய ப்ளான்

இந்நிலையில் இங்கிலாந்து நாட்டின் குடியுரிமையை பெற்று ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்க வாய்ப்புகள் உள்ளது.

பரபரப்பு

பரபரப்பு

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளராக இருந்த முகமது அமீர் கடந்த 2020, டிசம்பர் மாதம் தீடீரென தனது ஓய்வை அறிவித்தார். 28 வயதே ஆகும் அவர் ஓய்வு அறிவித்தது அதிர்ச்சியை கிளப்பியது. தனக்கு, பாகிஸ்தான் அணியில் சரியான மரியாதை கிடைக்கவில்லை. மன ரீதியாக தனக்கு நிர்வாகம் கொடுத்த அழுத்தமே நான் ஓய்வு பெற காரணம் என பரபரப்பை கிளப்பினார். மேலும் அணி நிர்வாகம் மாறிய பிறகு மீண்டும் அணிக்கு திரும்புவேன் எனத்தெரிவித்திருந்தார்.

குடியுரிமை

குடியுரிமை

முகமது அமீர் தற்போது குடும்பத்தினருடன் தற்போது இங்கிலாந்தில் தங்கியுள்ளார். அவரது மனைவி இங்கிலாந்தை சேர்ந்தவர் என்பதால் முகமது அமீர், தானும், தனது குடும்பத்தினரும் இங்கிலாந்து குடியுரிமை பெறவுள்ளோம். அடுத்த 7 ஆண்டுகள் வரை அங்குள்ள உள்நாட்டு அணியில் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன் எனத் தெரிவித்தார்.

ஐபிஎல்-ல் பாக். வீரர்கள்

ஐபிஎல்-ல் பாக். வீரர்கள்

இதனால் அவர் இங்கிலாந்து குடியுரிமையுடன் ஐபிஎல் தொடரில் பங்கேற்பார் எனக்கூறப்படுகிறது. ஐபிஎல் தொடரின் 2வது சீசன் முதல் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்படுவதில்லை. இதுவரை பாகிஸ்தானை சேர்ந்த அசார் முஹ்மூத் மட்டுமே ஐபிஎல்-ல் பங்கேற்று பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு விளையாடியுள்ளார். அவர் அப்போதும் கூட இங்கிலாந்து குடியுரிமையுடன் தான் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமீரின் விளக்கம்

அமீரின் விளக்கம்

இந்நிலையில் தனது நிலைபாடு குறித்து பேசியுள்ள அமீர், இங்கிலாந்து குடியுரிமை பெற்ற பின் என்ன செய்யலாம், எந்தெந்த போட்டிகளில் பங்கேற்கலாம் என்பது குறித்து தற்போது எனக்கு எந்த யோசனையும் இல்லை. குடியுரிமை பெற்ற பின் அதற்கேற்றார் போல் செயல்படுவேன் என்பது போல கூறியுள்ளார்.

Story first published: Thursday, May 13, 2021, 17:34 [IST]
Other articles published on May 13, 2021
English summary
Mohammad Amir opens up his plans on getting British Citizenship and participating in IPL Tournement
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X