For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

3வது கல்யாணமா.. எனக்கா.. அது எப்ப?.. ஆச்சரியப்படும் அஸாருதின்

ஹைதராபாத்: எனக்கு 3வது முறையாக திருமணம் நடந்ததாக வெளியாகியுள்ள செய்தியில் சற்றும் உண்மை இல்லை என்று முன்னாள் கிரிக்கெட் கேப்டன் முகம்மது அஸாருதின் கூறியுள்ளார்.

இது தவறான செய்தி மட்டுமல்ல பொய்யான செய்தியும் கூட என்று கூறியுள்ள அவர் இதுபோன்ற செய்திகளை ஊடகங்கள் நன்கு தெளிவுபடுத்திக் கொண்டு வெளியிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து டிவிட்டரில் அஸாருதின் கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த ஷனான் மேரி என்ற பெண்ணை அஸார் மணந்து கொண்டதாக வந்த செய்தியால் நேற்று பரபரப்பு ஏற்பட்டுப் போனது.

மகாராஷ்டிரா டைம்ஸ்

மகாராஷ்டிரா டைம்ஸ்

மகாராஷ்டிரா டைம்ஸ் என்ற இதழ்தான் இந்த செய்தியை நேற்று வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. அதில். மும்பைக்கு சனிக்கிழமை வந்த அஸாருதினுடன் ஷனான் மேரியும் உடன் வந்திருந்தார்.

இவர் என் மனைவி

இவர் என் மனைவி

அஸாரின் கார் டிரைவர் சமீபத்தில் மரணமடைந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற வந்திருந்தார் அஸார். அவருடன் மேரியும் வந்திருந்தார். அவரை தனது மனைவி என்று டிரைவரின் குடும்பத்திடம் அறிமுகம் செய்துள்ளார் அஸார்.

ஐபிஎல் போட்டிகளில் ஜோடியாக

ஐபிஎல் போட்டிகளில் ஜோடியாக

52 வயதான அஸார், ஐபிடிஎல் தொடர் போட்டிகளிலும் கூட மேரியுடன் காணப்பட்டார். டெல்லியில் நடந்த இந்தியன் ஏஸஸ் மற்றும் பிலிப்பைன் மேவரிக்ஸ் போட்டியைப் பார்க்க அவர்கள் வந்திருந்தனர் என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அடடா.. தப்புப்பா தப்பு

இதுகுறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அஸாருதின், எனது 3வது திருமணம் குறித்த செய்தி தவறல்ல, பொய்யானது. செய்திகளைப் போடும் முன்பு பரிசோதித்துக் கொண்டு போடுங்கள் என்று கூறியுள்ளார் அஸார்.

99 டெஸ்ட் ஆடியவர்

99 டெஸ்ட் ஆடியவர்

அஸாருதீன் 99 டெஸ்ட் போட்டிகள், 334 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி தடை விதிக்கப்பட்டு பல வருடங்களுக்குப் பிறகு அது நீக்கப்பட்டவர். ்

2 மனைவிகள்

2 மனைவிகள்

அஸாரின் முதல் மனைவி பெயர் நெளரீன். இவர்களுக்கு இரு மகன்கள். அதில் ஒருவர் சாலை விபத்தில் இறந்து விட்டார். 1996ம் ஆண்டு தனது முதல் மனைவியை விவாகரத்து செய்தார் அஸார். பின்னர் நடிகை சங்கீதா பிஜ்லானியை மணந்தார். அவர்கள் இருவரும் கடந்த 2010ம் ஆண்டுடன் பிரிந்து வாழ்ந்து வருவதாக கருதப்படுகிறது. இருவரும் சேர்ந்து காணப்படுவதில்லை.

அரசியல்வாதி

அரசியல்வாதி

கடந்த 2009ம் ஆண்டு அரசியலில் புகுந்த அஸார், உ.பி. மாநிலம் மொராதாபத் எம்.பி. தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலின்போது ராஜஸ்தான் மநிலம் டோங்க் சவாய் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

Story first published: Monday, December 21, 2015, 11:48 [IST]
Other articles published on Dec 21, 2015
English summary
Former India captain Mohammad Azharuddin on Sunday (December 20) denied reports that he has married for a third time. "News about my 3rd marriage is incorrect and false. Please check facts before publishing," he tweeted.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X