For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கங்குலியை கேப்டனாக உருவாக்கியதே இவர்தான்.. சர்ச்சையைக் கிளப்பிய முன்னாள் பாக். கேப்டன்!

மும்பை : இந்திய அணியின் சிறந்த கேப்டன்கள் வரிசையை எடுத்துக் கொண்டால் அதில் முகமது அசாருதீனுக்கும் ஒரு இடம் உண்டு.

ஆனால், அவர் தான் கங்குலியை கேப்டனாக உருவாக்கினார் என்று சொன்னால் அதை எத்தனை பேர் ஏற்றுக் கொள்வார்கள்? என்பது பெரிய கேள்விக் குறி.

அப்படித் தான் கூறி சர்ச்சையை கிளப்பி இருக்கிறார் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ரஷித் லத்தீப். தோனியின் கேப்டன்சியை பற்றியும் அவர் பேசி உள்ளார்.

உங்க டீமில் ஆடமாட்டேன்.. நோ சொன்ன சேவாக்.. தோனியை வைத்து 3 மாங்காய் அடித்த சிஎஸ்கே.. செம ட்விஸ்ட்!உங்க டீமில் ஆடமாட்டேன்.. நோ சொன்ன சேவாக்.. தோனியை வைத்து 3 மாங்காய் அடித்த சிஎஸ்கே.. செம ட்விஸ்ட்!

இந்தியா அணி நிலை

இந்தியா அணி நிலை

2000த்தின் இறுதியில் இந்திய அணி அசாருதீன் - சச்சின் டெண்டுல்கர் என கேப்டன்களை மாற்றிக் கொண்டே இருந்தது. நீண்ட காலம் கேப்டனாக இருந்த அசாருதீன் கேப்டன்சியில் இருந்து அடுத்த கட்டத்திற்கு நகர முடியாமல் திணறியது.

இந்திய அணியின் எதிர்காலம்?

இந்திய அணியின் எதிர்காலம்?

சச்சினும் ஒரு கட்டத்தில் தன் கேப்டன்சியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதே நேரத்தில் இந்திய அணியில் அசாருதீன் மீது மேட்ச் பிக்ஸிங் புகார் கிளம்பவே இந்திய அணியின் எதிர்காலம் கேள்விக் குறியானது. இதற்கிடையே கேப்டனாக நியமிக்கப்பட்டவர் தான் சவுரவ் கங்குலி.

கங்குலிக்கு எதிர்ப்பு

கங்குலிக்கு எதிர்ப்பு

கங்குலியை துணை கேப்டனாகக் கூட நியமிக்கக் கூடாது என அப்போது பிசிசிஐயில் விவாதம் நடந்ததாக ஒரு தகவல் உண்டு. இந்த நிலையில், பலரது எதிர்ப்பையும் மீறித் தான் கேப்டன் ஆனார் கங்குலி. இந்திய அணியை மிக சிறப்பாக வளர்த்தார்.

தள்ளி வைக்கப்பட்ட கங்குலி

தள்ளி வைக்கப்பட்ட கங்குலி

கங்குலி மூத்த வீரர்களுக்கு மரியாதை அளிக்கவில்லை என துவக்கத்தில் இந்திய அணியில் இருந்தே சில ஆண்டுகளுக்கு தள்ளி வைக்கப்பட்டு இருந்தார். அது அசாருதீன் கேப்டன்சியில் தான் நடந்தது. இந்த நிலையில், அசாருதீன் எப்படி கங்குலியை உருவாக்கினார்?

அசாருதீன் பங்கு

அசாருதீன் பங்கு

ஆனால், அப்படித் தான் கூறி இருக்கிறார் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ரஷித் லத்தீப். கங்குலியை கேப்டனாக உருவாக்கியதில் அசாருதீன் பங்கு மிகவும் அதிகம். அதன் பின் சச்சின், டிராவிட் போன்ற ஜாம்பவான்கள் அவர் கேப்டன்சியில் ஆடினார்கள் என்றார் லத்தீப்.

அசாருதீன் கங்குலியை உருவாக்கினார்

அசாருதீன் கங்குலியை உருவாக்கினார்

மேலும், அசாருதீன் தான் கங்குலியை உருவாக்கினார். தோனி, அவர்கள் இருவரின் குணங்களை இணைத்து, தன் ஸ்டைலை கொண்டு வந்தார். தோனியின் கேரியர் ஒரு வகையில் கங்குலியை சார்ந்தே இருந்தது என்றார் ரஷித் லத்தீப்.

நம்ப முடியாத தகவல்

நம்ப முடியாத தகவல்

முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ரஷித் லத்தீப் பேச்சு சர்ச்சையை கிளப்பி உள்ளது. அசாருதீன், கங்குலி இடையே நல்ல நட்பு உள்ளது என்றாலும், கங்குலியை உருவாக்கியது அவர் தான் யாரும் நம்ப முடியாத தகவலை கூறி இருக்கிறார் லத்தீப்.

Story first published: Saturday, September 12, 2020, 21:01 [IST]
Other articles published on Sep 12, 2020
English summary
Mohammad Azharuddin made Sourav Ganguly as a captain says former Pakistan captain Rashid Latif. He also claims Dhoni combine both of their qualities and created his own style.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X